திருமணமான கையோடு காவல் நிலையம் வந்த காதல் ஜோடி! ஆனால் அங்கு நேர்ந்த விபரீதம்! பதற வைக்கும் சம்பவம்!

கரூரில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி பாதுகாப்பு வேண்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்,


கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேகரின் மகன்  மணிவாசன்(வயது 22), கடவூர் அருகே உள்ள செம்பியாநத்தம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைக் கண்ணு. மகள் ரம்யா(20) இருவரும் கரூரில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

இதில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து சுமூகமாக சென்ற நிலையில், எதிர்பாராத விதமாக ரம்யாவுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு செய்தனர்.இதனால் அதிருப்தி அடைந்த  ரம்யா வீட்டை விட்டு வெளியேறி மணிவாசனுடன் தோகைமலை அருகே உள்ள மங்காம்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர் நேற்று இரவு அவர்கள் தோகைமலை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரம்யா தன் காதல் கணவருடன் செல்வதாக உறுதிபட தெரிவித்து அவருடன் கிளம்பி சென்றார்.

பின்னர் ரம்யா, மணிவாசன் மற்றும் மணிவாசனனின் தந்தை சேகர், தாயார் அமுதா ஆகியோர் ஒரு காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது போலீஸ் நிலையம் அருகில் நின்றிருந்த மற்றொரு கார் அவர்களை பின்தொடர்ந்தது. சற்று தூரத்தில் மேட்டுப்பட்டி பாலம் அருகே காதல் ஜோடி சென்ற காரினை அந்த காரில் சென்றவர்கள் வழி மறித்து

மணிவாசன் உட்பட அவரது தந்தை சேகர், அமுதா ஆகியோரை கூர்மையான  ஆயுதங்களால் தாக்கி விட்டு ரம்யாவை தாங்கள் வந்த காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மூவரும் குளித்தலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரம்யாவை காரில் கடத்தி சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.  ரம்யா காவல் நிலையத்தில் அவரது பெற்றோருடன் செல்ல மறுத்த கோபத்தில் சொந்த பெற்றோரே ரம்யாவை மீட்க இந்த செயலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கபடுகிறது.