மாப்பிள்ளைக்கு தாலி கட்டி கல்யாணம் செய்த இளம் தமிழ்ப்பெண்! திருமண வீட்டில் திடீர் சம்பவம்!

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணப்பெண் மணமகனுக்கு தாலி கட்டிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.


பொதுவாக திருமணத்தின் போது மணமகன் மணமகளுக்கு தாலி கட்டுவது வழக்கமான நிகழ்வாகும். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்நாடகாவில் விஜயபுரா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாப்பிள்ளைக்கு மணமகள் தாலிகட்டும் சம்பரதாயம் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில் இந்த திருமணத்தின் புகைப்படம் இணையதளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கர்நாடகாவில் நடைபெற்ற திருமணமானது 12ஆம் நூற்றாண்டில் சமூக சீர்திருத்தவாதியான பசவண்ணா என்பவரின் சிலைக்கு அருகே நடைபெற்றுள்ளது.

இத் திருமணம் குறித்து அவர்களின் பெற்றோர்களிடம் கேட்டபோது அதற்கு அவர்கள் இந்த நிகழ்வு ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றமில்லை என்று சாதாரணமாக பதில் அளித்துள்ளனர். முதலில் மணமகன் மணமகளுக்கு தாலி கட்டி முடித்த பின்னர் மணமகள் மாப்பிள்ளைக்கு தாலி கட்டுவார்கள் இதன் மூலம் ஆண் பெண் இருவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது அதே மாதிரியாக சுவிட்சர்லாந்து நாட்டில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் மணமகனுக்கு தாலி கட்டியுள்ளார். இந்நிலையில் அவர்களது திருமணம் முடிந்த பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.