போதை பொருளுக்கு என்னை அடிமையாக்கினான்! வாழ்வை சீரழித்தான்! இளம் பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

தன்னுடைய காதலன் தன்னை போதை பொருளுக்கு அடிமையாக்கி தனது வாழ்வை சீரழித்துவிட்டதாக இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.


கோவையை சேர்ந்த இளம் பெண் கவுசல்யா சென்னையில் தங்கி பணியாற்றி வருகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் டெக்னிகல் பிரிவிலும் பணியாற்றியுள்ளார். தற்போது வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அவர் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது காதலன் அசன் என்பவன் தன்னை போதைப் பொருளுக்கு அடிமையாக்கியுள்ளதாக கூறியுள்ளார் கவுசல்யா.

மேலும் போதைப் பொருளுக்கு அடிமையாக்கியதோடு தனது வாழ்வையும் காதலன் அசன் சீரழித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை போன்றே மேலும் சில பெண்களுக்கும் போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி அசன் ஏமாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை பார்க் ஹோட்டலில் தோழியின் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற போது தனது காதலன் அசன் தன்னை மீண்டும் போதைப் பொருள் பயன்படுத்துமாறு கூறியதாக கவுசல்யா தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு தான் மறுத்ததாக கவுசல்யா தெரிவித்துள்ளார்.

அசன் நடவடிக்கை பிரியாமல் ஏற்கனவே தான் பிரிந்து விட்டதால் ஓட்டலில் இருந்து வெளியேற முயன்றேன். அப்போது எனது செல்போனை பிடிங்கி அசன் தன்னை கடுமையாக தாக்கியதாகவும் இதனால் தான் காயம் அடைந்து மருத்துவமனையில் இருப்பதாகவும் கவுசல்யா கூறியுள்ளார்.

அசன் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றும் கவுசல்யா கூறியுள்ளார். மேலும் காதலன் குறித்து கவுசல்யா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.