தியேட்டரில் வைத்து 60 வயது முதியவருக்கு மகளை விருந்தாக்கிய தாய்..! அதிர்ச்சி சம்பவத்தில் பரபரப்பு திருப்பம்!

திருவனந்தபுரம்: தியேட்டரில் பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கேரளாவின் மலப்புரத்தில் உள்ள எடப்பல் பகுதியில்  செயல்படும் தியேட்டர் ஒன்றில் படம் பார்க்க வந்த 60 வயது ஆண் ஒருவர், தனது அருகில் அமர்ந்திருந்த தாய் மற்றும் மகளை ஒரே நேரத்தில் பாலியல் சீண்டல் செய்தார். குறிப்பாக, தனது மகளை அவர் சீண்டுகிறார் என தெரிந்தும், அதனை அனுமதித்ததோடு, தானும் அந்த ஆண்கூட உல்லாசம் அனுபவித்த தாயின் செயல்தான் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

இதனை தியேட்டர் உரிமையாளர் சிசிடிவி கேமிராவில் பார்த்தது மட்டுமின்றி உடனடியாக போலீசாருக்கு அனுப்பி வைத்தார். போலீசார் இதுபற்றி வழக்குப் பதிந்து விசாரித்து, இத்தகைய கொடூரத்தை செய்த 60 வயது முதியவர் மொய்தீனை கைது செய்ததோடு, அவருடன் உடந்தையாகச் செயல்பட்ட அந்த தாய் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியையும் பிடித்தனர்.  

இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அந்த நபருக்கும், சிறுமியின் தாய்க்கும் போக்சோ சட்டத்தின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதேசமயம், குறிப்பிட்ட சிறுமியை சில காலம் மனநல ஆலோசனை வழங்கி, காப்பகத்தில் வைத்து பராமரிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி காப்பகத்தில் இருந்து வந்த சிறுமியை தற்போது அவரது வீட்டிற்கு செல்லும்படி கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், சிறுமியின் தாய் மற்றும் முதியவர் மொய்தீன் ஜாமின் பெற்று வெளியே நடமாடுகின்றனர். அவர்களால் சிறுமிக்கு ஏதேனும் பாதிப்பு நேரிடலாம் என்று, சிறுமியின் சார்பாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.