என்னை கற்பழித்த வீடியோ அந்த பெண் டிரைவில் உள்ளது! போலீசை அதிர வைத்த சட்டக்கல்லூரி மாணவி!

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் மீதான ஆதாரத்தை, பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் சமர்ப்பித்துள்ளார்.


மறைந்த வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றவர் சுவாமி சின்மயானந்த். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவருக்கு தற்போது 72 வயதாகிறது. இந்நிலையில், இவர் மீது 23 வயதான இளம்பெண் ஒருவர் பரபரப்பு செக்ஸ் புகாரை கூறியுள்ளார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக, தன்னை முறைகேடாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, அதைக் காட்டி மிரட்டி, அடிக்கடி சின்மயானந்த் தன்னுடன் உடலுறவு செய்தார் என்பதே அப்பெண்ணின் புகாராகும்.  இதற்கான ஆதாரமாக, தனது தோழி ஒருவரின் மூலமாக, பென் டிரைவ் ஒன்றில் சில வீடியோ ஆதாரங்களையும் அந்த பெண் போலீசில் சமர்பித்துள்ளார்.

ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்த போது, தனக்கு இந்த சம்பவம் நிகழ்ந்தது என்றும், இதனை மூக்குக்கண்ணாடியில் கேமிரா ஒளித்து வைத்து, படம்பிடித்தேன். இதனை வெளியில் தெரிவித்தால் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார்கள் என்றும் அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.    

இதுபற்றி உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக்குழுவில் ஒரு பென் டிரைவில் அவரது தோழி சமர்ப்பித்ததை தொடர்ந்து, இவ்விவகாரம் சூடு பிடித்துள்ளது. கடந்த வாரம் இதுதொடர்பான வீடியோ ஒன்றை பேஸ்புக்கில் பகிர்ந்த குறிப்பிட்ட இளம்பெண், பிறகு தலைமறைவாகிவிட்டார்.

பின்னர், அவரை போலீசார் தேடி கண்டுபிடித்தனர். ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் இளம்பெண்களை சீரழிப்பதுதான் சின்மயானந்தின் வேலை எனவும் அப்பெண் குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையே சம்பந்தப்பட்ட பெண் வீண் நாடகம் போடுகிறார் என, சின்மயானந்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.