ஓடும் ஆட்டோ! பெண் உடலில் ராங் டச்! நடுவழியில் குதித்த பெண்! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

லக்னோ: ஓடும் ஆட்டோவில் டிரைவர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக, இளம்பெண் கீழே குதித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பிட்ட ஆட்டோவில் இளம்பெண் ஒருவர் சவாரிக்காக ஏறியுள்ளார். ஆனால், குடிபோதையில் இருந்த அந்த ஆட்டோ டிரைவர், வண்டி ஒடும்போது திடீரென இளம்பெண்ணிடம் தவறாக நடக்க தொடங்கியுள்ளார்.

அந்த பெண்ணை தொடக்கூடாத இடங்களில் எல்லாம் தொட்டு சில்மிஷம் செய்துள்ளார். ஒருகட்டத்தில், இளம்பெண்ணை கடும் தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளார் அந்த குடிகார ஆட்டோ டிரைவர். அதிர்ச்சி அடைந்த இளம்பெண், உடனடியாக, நடுவழியில் ரோட்டில் கீழே குதித்தார்.

இதில், அவருக்கு காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, சம்பவம் பற்றி கேள்விப்பட்ட பொதுமக்கள் உடனடியாக, சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்து, ஆட்டோவில் இருந்து கீழே இழுத்து தள்ளி உதைக்க ஆரம்பித்தனர்.

ரத்தம் வரும் அளவுக்கு டிரைவரை தாக்கிய பொதுமக்கள் பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆட்டோ டிரைவர் தாக்கப்படும் காட்சி, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.