சென்னை: நடிகை தான்யா, பேட்டி ஒன்றில் விந்து தானம் செய்வது பற்றி பேசியதன் மூலமாக, டிரெண்டிங் ஆகியுள்ளார்.
ஆண்கள் அதிக அளவில் விந்து தானம் செய்ய வேண்டும்..! இளம் நடிகையின் ஆசை..! ஏன் தெரியுமா?

மகிழ் திருமேனி இயக்கத்தில், அருண் விஜய் நடித்த தடம் படம், பரவலான கவனம் ஈர்த்த ஒன்றாகும். இந்த படத்தில், பெங்களூருவைச் சேர்ந்த தன்யா ஹோப் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது, இவர் தாராள பிரபு என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பற்றி ஆன்லைன் ஊடகம் ஒன்றுக்கு, தான்யா பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், ''விந்து தானம் பற்றி இந்தியில் எடுக்கப்பட்ட விக்கி டோனர் படத்தின் ரீமேக்தான் தாராள பிரபு. இந்த படத்தில், விந்து தானம் செய்வது பற்றித்தான் கதை. குழந்தை வரம் கிடைக்காதவர்களுக்கு அப்படி விந்து தானம் தரக்கூடிய ஒரு ஆள் கிடைப்பது வரம்தான். விந்து தானம் செய்வது நல்ல விசயம்தான்.
இளைஞர்கள் அதைச் செய்யலாம்,'' என்று கலகலப்பாக தான்யா பேசியுள்ளார். இந்த பேட்டி தற்போது வைரலாக பரவிவருகிறது.