உடை மாற்றும் அறையில் வைத்து! பிரபல டாக்டர் மீது இளம் டிவி நடிகை பகீர் புகார்!

மும்பை: பிளாஸ்டிக் சர்ஜரி புகழ் டாக்டர் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.


சான்டா க்ருஸ் பகுதியை சேர்ந்தவர், பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் டாக்டர் விரல் தேசாய். இவர், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு, பிளாஸ்டிக் சர்ஜரி, மீசோதெரபி - சருமத்தை  பொலிவூட்டி, தளர்வை நீக்கும் சிகிச்சை உள்ளிட்டவற்றை செய்வதில் வழக்கம்.

இதற்காகவே, 2015ம் ஆண்டு முதலாக, காஸ்மெட்டிக் பிளாஸ்டிக் சர்ஜரிஸ் அண்ட் லேசர் சூப்பர் ஸ்பெசாலிடிஸ் எனும் மருத்துவமனையை ஆரம்பி நடத்தி வருகிறார்.  

இந்நிலையில், 2015ம் ஆண்டு முதல் இவரது மருத்துவமனைக்கு, நடிகை ஒருவர் சிகிச்சை பெற வந்துள்ளார். அது முதலாக, அவருக்கு சிகிச்சை அளித்த அதேசமயம், அவரது அழகில் மயங்கியதாகக்கூறி விரல் தேசாய் பாலியல் ரீதியாக தொல்லை தர தொடங்கியுள்ளார்.

மும்பையில் உள்ள பிரபலமான பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்களில் தேசாயும் ஒருவர் என்பதால், இந்த தொந்தரவை மறுக்க முடியாமல் தவித்து வந்த நடிகை, தற்போது  ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், ''நீண்ட நாளாகவே பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்த தேசாய், சமீபத்தில் சிகிச்சை பெற வந்தபோது, சிகிச்சை முடிந்ததும், திடீரென தனி அறைக்கு என்னை மாற்றிய 

டாக்டர், என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தார். பிறகு என்னை கட்டுப்படுத்தி, ஒருவழியாக பலாத்காரம் செய்துவிட்டார்,'' என்று புகார் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, சான்டா க்ரூஸ் வெஸ்ட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். எனினும், சம்பந்தப்பட்ட நடிகையின் பெயர் இதுவரையிலும் வெளியிடப்படவில்லை. மும்பையில் உள்ள டாக்டர்களில் பிரபலமான நபர் என்பதால், தேசாய் மீதான இந்த புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.