செவ்வாய் கிழமை முருகனைக் கும்பிட்டால் சொந்த வீடு அமையும் யோகம் கிடைக்கும்!

சொந்த வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் கனவு. குட்டியூண்டு வீடு கிடைச்சாலும் போதும், அது சொந்த வீடாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய உழைப்பு முழுமையாக கொடுப்பவர்கள் ஏராளம். ஆனாலும், சொந்த வீடு அத்தனை எளிதில் அமைவதில்லை.


ஆனால், முருகப் பெருமானை வணங்கினால் சொந்த வீடு எளிதில் அமையும் என்கிறது வேதங்கள். இதற்கான வழிபாட்டு முறையும் மிகவும் எளிதானதே

ஆம், பதினெட்டு செவ்வாய் கிழமை முருகப்பெருமானுக்கு தொடர்ச்சியாக மலர் அபிஷேகம் செய்துவர வேண்டும். மலர் அபிஷேகம் என்றதும் கூடை கூடையாக மலர் கொட்ட வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. முருகனுக்கு உகந்த நிறம் சிவப்பு ஆகும். அதனால் செந்நிற பூக்கள் ரோஜா அல்லது முல்லை மலர் ஒரு கைப்பிடியை அவன் பாதங்களில் சமர்ப்பித்தாலே போதும்.

முருகன் திருக்கோயிலுக்குச் சென்றுவந்த பிறகு வீட்டில் வைத்து கந்தசஷ்டியை முழுமையாகப் படித்து முடிக்க வேண்டும். கோயிலில் இறைவனை வணங்கும்போதும், கந்தசஷ்டி படித்து முடிக்கும்போதும், இறைவன் முன்பு ஒற்றை ஆசையாக சொந்த வீடு அமைய வேண்டும் என்பதை மட்டும் முன்வைக்க வேண்டும்.

18 வார செவ்வாய்க்கிழமை முருகப் பெருமான் பூஜையை சிறப்புற செய்துமுடித்தால் சொந்த வீட்டு யோகம் நிச்சயம் அமையம். செய்துதான் பாருங்களேன்.