இனி YouTubeல் அந்த மாதிரி வீடியோக்களை பார்க்க முடியாது! வந்தது அதிரடி தடை!

இனவெறியை தூண்டும் வீடியோக்களை தடை செய்ய உள்ளதாக, யூ டியுப் தெரிவித்துள்ளது.


சமூக ஊடகங்களில், யூ டியுப் முக்கிய இடம்பிடித்துள்ளது. இந்நிலையில், புதிய கொள்கை முடிவை மேற்கொண்டுள்ளதாக, யூ டியுப் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''இனப் பாகுபாட்டை ஏற்படுத்தக்கூடிய, இனவெறியை தூண்டக்கூடிய வீடியோக்களை தடை செய்ய முடிவெடுத்துள்ளோம்.

இந்த புதிய நடைமுறை உடனே அமலுக்கு வருகிறது. எனினும், இதனை முழுமையாக நிறைவேற்ற சில மாதங்கள் ஆகலாம்,'' எனக் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், நியூசிலாந்து நாட்டில் மசூதி ஒன்றில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் நேரடியாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

இதனை அடுத்து, ஃபேஸ்புக், யூ டியுப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் இப்புது முடிவை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் மோசமான பாலியல் காட்சிகள், கொடூரமான பாலியல் காட்சிகளையும தடை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.