ஆபாச படத்தில் நடிக்கும் யோகி பாபு – யாஷிகா!

பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவும், கவர்ச்சி நடிகை யாஷிகாவும் இணைந்து ஆபாச படம் ஒன்றில் நடிக்க உள்ளனர்.


  தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக திகழ்பவர் யோகி பாபு. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களும் தங்கள் படங்களில் யோகி பாபுவை நடிக்க வைக்கும் அளவிற்கு அவர் உயரத்தில் இருக்கிறார். இதே போன்று வேறு நடிகர்கள் மட்டும் அல்லாமல் இயக்குனர்களும் யோகி பாபுவை தேடி வருகின்றனர்.

  இதே போல் யாஷிகா ஆனந்தும் தமிழ் திரையுலகின் புதிய கவர்ச்சி நடிகையாக களம் இறங்கியுள்ளார். கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை என்பதால் இயக்குனர்களின் கவனம் யாஷிகா மீது திரும்பியுள்ளது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலம் யாஷிகாவும் நிறைய பட வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது.

  அண்மையில் யோகி பாபுவுடன் இணைந்து பேய் படம் ஒன்றில் நடிக்க யாஷிகா ஒப்பந்தம் ஆனார். இதனை தொடர்ந்து மீண்டும் யோகி பாபுவுடன் நடிக்க யாஷிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புதுமுக இயக்குனர் விநாயக் சிவா இயக்கும் இந்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் ஒன்லி படமாகும்.

  இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில்     நடிக்கிறார். யாஷிகா மற்றும் சில பெண்களும் இநத் படத்தில் உண்டு. யோகி பாபு உருவத்தை யாஷிகா கிண்டல் செய்வதால் அவர் தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பிறகு பேயாக வந்து யாஷிகாவை எப்படி டார்ச்சர் செய்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதையாம்.

  அடல்ட் ஒன்லி என்பதால் யோகி பாபு – யாஷிகா ஆனந்த் இடையிலான காட்சிகள் சூட்டை கிளப்பும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.