காசி விஸ்வநாதரை இனி தொட்டுக் கும்பிட முடியாது! திடீர் தடை போட்ட யோகி ஆதித்யநாத்!

காசி விசுவநாதரை இனி,கிட்டப்போய் தொட்டுக்கும்பிட தடை!


இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று காசி விஸ்வநதர் ஆலயம்.12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று.வரலாற்றில் இந்தக்கோவில் பலமுறை புதுப்பிக்க பட்டிருக்கிறது.நாம் இப்போது பார்க்கும் காசி விசுவநாதர் ஆலயம் அஹிலியா பாய் ஹோல்கர் என்பவரால் 1780ல் கட்டப்பட்டது.பெரும்பாலான இந்தியக் கோவில்களில் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு சலுகை இந்த கோவிலில் பக்தர்களுக்கு அளிகப்பட்டு வந்தது.

கோவிலுக்கு வரும் பக்த்தர்கள் அனைவரும் கற்பகிருகத்துக்குள் அனுமதிக்க படுவார்கள்.அவர்கள் தங்கள் கைகளால் விசுவநாதனின் உருவமாக இருக்கும் லிங்கத்தை தொட்டுக் கும்பிடலாம்.லிங்கத்துக்கு செயப்படும் அபிசேகத்தை தானே கைகளால் அள்ளித் தலையில் தெளித்துக் கொள்ளலாம். பல நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்த முறையை இப்போது உத்திரப்பிரதேச அரசு தடை செய்து விட்டது.

கடந்த ஞாயிற்று கிழமையோடு அதற்கு முடிவுகட்டப்பட்டு விட்டது.இனி பக்தர்கள் மூன்று அடி தூரம் முன்பே நின்றுதான் வணங்க வேண்டும்.அதற்கான தடுப்புகளும் அமைக்கபட்டு விட்டன.வழக்கமாக நெரிசல் அதிகமாக இருக்கும் சிரவன மாதத்தில் மட்டும் இப்படிப்பட்ட முறை இருந்தது.இப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படிர் தடை ஏற்படுத்தி இருப்பதாக ஆலயத்தின் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தக்கோவிலுக்கு உள்ளூர் மக்கள் 5000 பேர்வரை தினமும்,காலையும், மாலையும் வந்து வணங்குவது வழக்கம்.அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமிருந்து விசுவநாதரைக் கான நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆனால்,இந்தக் கட்டுப்பாடெல்லாம் பொது மக்களுக்கு மட்டும்தான்.வி.ஐ.பி,வி.வி ஐப்பிக்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை,

அவர்கள் கருவரைக்குள் சென்று சிவலிங்கத்தின் முன்னால் அமர்ந்து கு.பிடலாம்.வாழ்க , உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதியநாத்.