மாடுகளுக்கு ஸ்வட்டர், கம்பளி கொடுக்கும் யோகி ஆதித்யநாத்! மயிலுக்குப் போர்வை கொடுத்த கொடுத்த மன்னனுக்கு பெப்பே...

மயிலுக்குப் போர்வை, முல்லைக்குத் தேர் கொடுத்தார்கள் என்று இலக்கியத்தில் தமிழ் மன்னர்கள் பற்றி படித்திருக்கிறோம்.


அதனை கண்ணுக்கு முன்னே நிரூபித்துக் காட்டியிருக்கிறார் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். ஆம், மாடுகளுக்கு ஸ்வட்டர், கம்பளி, சாக்ஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பா.ஜ.க.வின் இந்த முட்டாள்தனமான செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து இருக்கிறார்  

தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா. மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்கியது, புரோகிதர்கள் வைத்து பசுகளுக்கு வேதம் ஓத கற்று கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை உத்தரவுகளை பிறத்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தற்போது மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடு முழுவதும் குளிர்காலம் தொடங்கவுள்ளதால், மாடுகளை இந்த குளிரில் இருந்து காக்க நிதி ஒதுக்கியுள்ளார். அதில் வேடிக்கை என்னவென்றால் மாடுகளுக்கு ஸ்வட்டர், கம்பளி வழங்கவும், காலில் சாக்ஸ் போன்றவை அணிவிக்கவும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளது, அம்மாநில மக்களுக்கு மட்டுமல்லாது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநில நாட்டில் பெரிய மாநிலமாக திகழ்ந்து வந்தாலும், பொருளாதாரம், கல்வி, மருத்துவம் என அடிப்படை கட்டமைப்பில் பின்தங்கிய மாநிலமாக தான் உள்ளது. மக்களின் தேவைகளுக்காக நிதி ஒதுக்காமல், இது போன்ற தேவையற்ற செயல்களால் மக்கள் வரிபணம் வீண் விரயம் செய்யப்படுவது கண்டனத்துகுரியது.

உத்தரபிரதேச மாநிலத்தில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பல குடும்பங்களுக்கு மூன்று வேலை உணவு கூட கிடைப்பதில் சிரமம் உள்ளது. அதே போன்று அம்மாநில பல்லாயிரம் குடும்பங்கள் தங்கள் குழந்தைகள் சாலையேரங்களில் வசித்து வருகின்றனர். இந்த குடும்பங்களுக்கோ அல்லது அந்த குழந்தைகளுக்கோ கூட கம்பளி, ஸ்வட்டர் வழங்குவதாக முதல்வர் யோகி ஆதித்யாத் உத்தரவிட்டிருந்தால் அதனை மனதார வரவேற்றிருக்கலாம்.

உயிரினங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம் தான், ஆனால் அது எந்த வகையில் அமைய வேண்டும் என்பது தான் முக்கியம். இது போன்ற செயல்களுக்கு நிதி ஒதுக்குவதை விட்டு மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்காக தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.