எஸ் வங்கியில் ராணா கபூரின் ஆதிக்கம் முடிந்தாலும், வங்கியின் பயணம் தொடர்கிறது!

"யெஸ் வங்கி" நம்பகமான வங்கி என்ற முழக்கத்துடன் அசோக் கபூர் மற்றும் ராணா கபூர் ஆகிய இருவரால் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தனியார் துறை வங்கியாகும். இந்திய பொருளாதாரம் மிகவும் சிக்கலான தருணத்தில் இருந்த போதும் கூட. குறுகிய காலத்தில் பிரமாண்டமான வளர்ச்சியைப் பெற்றது இந்த வங்கி,


படிப்படியாக இந்தியாவின் நான்காவது பெரிய தனியார் வங்கி என்ற அந்தஸ்தையும் பெற்றது அந்த வேளையில். வளர்ந்துவரும் நிறுவனங்கள் மற்றும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தொழில்நுட்ப துணையுடன் கூடிய அதிநவீன வங்கித் தீர்வுகளை வழங்குவதில் யெஸ் பேங்க் அதிக அக்கறை காட்டியது. வெற்றியும் பெற்றது

கார்ப்பரேட் மற்றும் ஆன்லைன் வங்கியில் தனித்துவமான வங்கிச் சேவைகளை வழங்கி சிறப்பாகச் செயல்பட்டுவந்த யெஸ் பேங்க் செழிப்பாக வளர்ந்ததுடன் அதன் சந்தை மதிப்பும் கூடவே வளர்ந்தது என்றே கூற வேண்டும். இந்த நிலையில் இந்த வங்கியின் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் முதல் 100 இடங்களை தக்கவைத்துக்கொண்டது .

இந்த வங்கியின் வெற்றிக் கதை இப்படி போய்க் கொண்டிருந்த வேளையில். 2008 ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில், இந்த வங்கியின் நிறுவனர்களில் ஒருவரான அசோக் கபூர் துரதிர்ஷ்டவிதமாக உயிரிழந்து விடுகிறார், ஆனால் தனது அசாத்திய துணிச்சலால் ராணா கபூர் தலைமையில் யெஸ் பேங்க் தொடர்ந்து வீறுநடை போட்டு வந்தது. 

கடந்த ஆண்டு வரை இதே தினம் வரை யெஸ் வங்கியின் சுமார் 9700 கோடி மதிப்பிலான பங்குகளை தன் வசம் ராணா கபூர் கொண்டிருந்தார். இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான புள்ளிவிவரங்களின் திறன். இந்த பொருளாதாரத்தில் யெஸ் வங்கி வகிக்கும் பங்கு குறித்து அவருக்கு பலமான நம்பிக்கை இருந்தது.

2007-2008 ம் நிதியாண்டில் 200 கோடி ரூபாயாக இருந்த யெஸ் வங்கியின் நிகர லாபம் 2017-18 ம் வருடத்தில் 4,225 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டது. இதன் மூலம் முதலீட்டாளர்களும் பெருத்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தது யெஸ் வங்கி.

வங்கியின் வளர்ச்சி ஒரு புறம் இருக்க, 2014 ம் ஆண்டின் தொடக்கத்தில் நிர்வாக கட்டமைப்பில் ராணா கபூருக்கும், அசோக் கபூரின் மனைவி மது கபூருக்கும் இடையே சர்ச்சை ஆரம்பமானது. இதுதான் யெஸ் வங்கியின் வீழ்ச்சிக்கான தொடக்கம் என்று கூறலாம். 

இதன் தாக்கம் 2017 ம் ஆண்டின் நிதி அறிக்கையிலும் வெளிப்பட்டது. நிர்வாகத்தில் ஏற்பட்ட சிக்கலால் யெஸ் வங்கி தனது பங்குதாரர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஆளாக நேரிட. IPOவில் முறைகேடு, ராணா – மது கபூர் முரண்பாடு, Yes கேபிடல் நிறுவனத்தில் ராணாவின் பங்கு, இயக்குனர்கள் குழுவில் அடுத்தடுத்த ராஜினாமா என யெஸ் வங்கியின் செய்தி காட்டுத் தீ போல பரவியது பங்குச் சந்தை எங்கும்.

இந்நிலையில் யெஸ் வங்கிக்கு தேவையான முதலீடுகள் கிடைப்பதிலும் சிக்கலும் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்க. மறு பக்கம் வாராக் கடன்களும் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது, 2019 முதல் காலாண்டு முடிவுகள் படி தோராயமாக இந்த வங்கியின் வாராக் கடன் அளவு 5.1% ஆக அதிகரித்தது. அதே போல நிகர வாராக் கடன்களின் அளவும் ஜூன் 2019 காலாண்டில் 2.91 % ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் 2018 முதல் காலாண்டில் நிகர லாபம் சுமார் 1,260 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக நிகர லாபத்தில் சரிவை மட்டும் கணக்கிட்டால் சுமார் 90 சதவிகிதம் சரிந்திருப்பதைப் சந்தித்துள்ளது இந்த வங்கி.

இந்த சூழலில் தலைமை செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குனராகவும் ராணா கபூர் 2019 ஜனவரி 31 வரை நீடிப்பார் என்று ஆர்.பி.ஐ. அனுமதி அளித்தது. ஆனால், ராணா கபூர், தன் பதவிக்காலத்தை இன்னும் மூன்று வருடங்களுக்கு அதாவது 2021 வருடம் ஆகஸ்ட் மாதம் 31 வரை நீட்டிக்குமாறு வைத்த கோரிக்கையை ஆர்பிஐ ஒத்துக்கொள்ளாது போக. ராணா கபூருக்கு எதிராக மது கபூர் தனது சித்து விளையாட்டை தொடங்கினார்.

இந்நிலையில், பங்கு கணிப்பீட்டு நிறுவனமான ஜெப்ரீஸ், யெஸ் வங்கியின் பங்கு மதிப்பை ரூ.80-லிருந்து ரூ.50 ஆகக் குறைத்துள்ளது அறிவிப்பு வெளியிடப்பட. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து யெஸ் வங்கியின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வரு கின்றன. இந்நிலையில் ராணா கபூர் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு ரூ.2850 கோடி என குறைந்துள்ளது.

கடந்த புதன்கிழமை, ராணா கபூர் யெஸ் வங்கியில் தனது பங்கு 1 சதவீதத்திற்கும் கீழை குறைந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதை அடுத்து ராணா கபூருக்கும் எஸ் வங்கிக்குமான உறவு முடிவிற்கு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மற்றும் இந்த வங்கியின் பங்குகள் 31 ரூபாயாக இறங்கி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

வங்கி வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிற வேளையில், விளம்பரதாரர்கள் மற்றும் கடன் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட கடனை அடைக்க சில பங்குகளை தானாக முன்வந்து விற்பனை செய்து வங்கியை காப்பாற்ற முனைப்புடன் செயல்பட்டு வந்தபோதும். யெஸ் பேங்கின் விளம்பரதார நிறுவனங்களில் ஒன்றான மோர்கன் கிரெடிட்ஸ் நிறுவனம் உறுதியளித்த பங்குகளை,

அவரது அனுமதியின்றி ஒரு சொத்து மேலாண்மை நிறுவனத்தால் விற்கப்பட்டன. இந்த விற்பனையின் மூலம் ராணா கபூரின் ஆளுகை. யெஸ் வங்கியில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள். யெஸ் வங்கியை கட்டியெழுப்ப அவருடன் பயணப்பட்ட அவரது குழுவினரும் சிறிது காலத்திலையே வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் கபூரின் நெருங்கிய லெப்டினெண்டாக இருந்த ரஜத் மோங்கா வங்கியில் இருந்து வெளியேறுவதாக வங்கி அறிவித்துள்ளார்,

யெஸ் வங்கியில் கபூரின் பங்கு முடிந்துவிட்டதாகத் தோன்றினாலும், இது எஸ் வங்கிக்கான பயணத்தின் முடிவு இல்லை. வங்கியின் தரத்தில் சரிவு இல்லை என்றும் வங்கியை மீட்டெடுக்கும் திறன் தங்களுக்கு உள்ளதாகவும், வங்கியின் செயல்பாடுகள் நிலையாக உள்ளதாகவும், யெஸ் வங்கி மீண்டுமொரு ஒரு சிம்ம சொப்பன பயணத்தைத் தொடரும் என்று புதிய தலைமை நிர்வாகி ராவ்னேட் சிங் கில் கூறியுள்ளார் .

மேலும் யெஸ் வங்கியை வேறொரு வங்கியுடன் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும். நிறுவன பங்குதாரர்கள் ஒரு வலுவான மற்றும் நிலையான வங்கி தொழில்நுட்பத்தையே விரும்புகிறார்கள் என்று முதலீட்டாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கூறியுள்ளார் புதிய நிர்வாக இயக்குனர் கில்.

எஸ் வங்கியில் கபூரின் அத்தியாயம் முடிந்திருக்கலாம், ஆனாலும் யெஸ் வங்கியின் வெற்றிக் கதை இன்னும் செயல்பாட்டில் தான் உள்ளது.

மணியன் கலியமூர்த்தி