இழுத்து மூடப்படும் எஸ் பேங்க்! ஒரே நாளில் திருப்பதி தேவஸ்தானம் எடுத்த ரூ.1300 கோடி! இதுவரை வெளிவராத அதிர்ச்சி தகவல்!

‘எஸ் பேங்க்’ குறித்த விவாதங்கள் தான் தற்போது காரசாரமாக நடந்து வருகிறது. வாராக்கடன், மோசமான நிர்வாகம் காரணமாக ‘எஸ் பேங்க்’ நிர்வாகத்தில் தலையீட்டுள்ளது ரிசர்வ் வங்கி.


எஸ் பேங்க் தன் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்துவிட்டதாக அறிவிப்பு வெளியிட்டது ரிசர்வ் வங்கி. வாடிக்கையாளர்களின் நலனை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கடன்சுமையிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. எஸ் பேங்கில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அவசர சூழலுக்கு வங்கி மேலாளரின் அனுமதியுடன் தேவையான பணத்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘எஸ் பேங்க்’ விவகாரம் இப்படி பூதாகரமாகியுள்ள நிலையில் திருப்பதி தேவஸ்தானம் எஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. திருப்பதியில் வரும் வருமானத்தை எஸ் பேங்க் டெபாசிட் செய்து வைத்துள்ளது. வங்கியின் போக்கு சரியில்லாததை உணர்ந்த திருப்பதி தேவஸ்தானம் 1300 கோடி ரூபாயை கடந்தாண்டு அக்டோபர் மாதம் எடுத்துள்ளது. இதற்கு முழு காரணமாக இருந்தது திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டிதான்.

ஆந்திர மாநில அரசு ஆலோசகர் எஸ்.ராஜீவ் கிருஷ்ணா திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டியின் நடவடிக்கையை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அந்தப்பதிவில், “ மக்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை எஸ் வங்கி வீணடித்துவிட்டது. எஸ் வங்கியின் இந்த நிலை வருத்தமளிக்கிறது. சுப்பா ரெட்டியின் தொலைநொக்கு பார்வையின் காரணமாக எஸ் வங்கியின் அழுத்தம் இருந்தும் வங்கி செயல்பாடுகள் மோசமானதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் பணத்தை திரும்ப பெற்றது” எனப் பதிவிட்டுள்ளார்.