எடியூரப்பா சாதிச்சிட்டாருப்பா! இனிமேல் நிம்மதியா ஆட்சியைப் பார்க்கலாம்!

கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைப்பதற்காக எடியூரப்பா நடத்திய நாடகங்களும், குதிரைபேரங்களும் கொஞ்சநஞ்சமல்ல.


அவர் ஆட்சியை நிலைக்க வைப்பதற்காக உச்ச நீதிமன்றம், மத்திய அரசு போன்றவையும் கடுமையாக வேலை செய்தன. இன்று எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் எடியூரப்பாவுக்குத் தேவையான பெரும்பான்மை கிடைத்துவிடவே, அவரும் டெல்லியும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளன.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 17 பேர் காங்கிரஸ், ஜனதாதளம் ஆட்சிக்கு எதிராக போரிட்டு தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தனர். ஆனால், இந்த எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை கவர்னர் ஏற்கவில்லை. அதேநேரம் சபாநாயகர் 17 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தார். அதனால் ஆளும் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. புதிய முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.

சுப்ரீம்கோர்ட்டில் நடந்த விசாரணையில், இந்த 17 பேரும் மீண்டும் போட்டியிட தடை இல்லை என்று உத்தரவு கிடைத்தது. அதனால் உடனடியாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்னமும் வழக்கு நிலுவையில் இருக்கும் ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் ராய்ச்சூரில் உள்ள மஸ்கி தொகுதியை தவிர மற்ற 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. 

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்படுகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க 6 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ., உள்ளது. ஆனால், 12 இடங்களில் முன்னிலை பெற்று வருவதால் ஆட்சிக்கு இருந்துவந்த சிக்கல் தீர்ந்தது.

இனியாவ்து ஆட்சி ஒழுங்காக நடக்கட்டும் என்பதுதான் மக்கள் எண்ணமாக உள்ளது.