ஸியோமி மொபைல் வச்சிருக்கீங்களா? அப்ப இத நீங்க முதல்ல படிங்க!

சென்னை: ஸியோமி மொபைலில் அதிக விளம்பரம் வருவதை தடுப்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.


ஸியோமி ஸ்மார்ட்ஃபோன் போலவே, அதில் தரப்படும் கஸ்டமைஸ்டு இயங்குதளமான MIUI பலரால் விரும்பி பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் தொழில்நுட்ப வசதிகள் பலவும், மற்ற இயங்குதளங்களில் இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணமாகும். ஆனால், இந்த MIUI பயன்படுத்துவதில் உள்ள மிகப்பெரிய குறை என்னவெனில், அதில் அடிக்கடி காட்டப்படும் விளம்பரங்கள்தான். 

இந்த செயலியில் மட்டுமின்றி, செட்டிங்க்ஸ் பகுதிகளில் கூட விளம்பரம் காட்டப்படுகிறது. இது பயனாளர்களுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. எனவே, வருமானத்திற்காக ஸியோமி காட்டும் இத்தகைய விளம்பரங்களை தடுக்க, முதலில் msa (MIUI System Ads) செயலியை கவனிக்க வேண்டும். இது வெளியில் தோன்றாது. செட்டிங்க்ஸ் பகுதியில் மறைந்திருக்கும்.

அங்கே சென்று Additional Settings/Authorization and Revocation என்ற பகுதியில், Revoke என தேர்வு செய்தால், msa செயலிக்கு தரப்பட்டுள்ள அனுமதி ரத்தாகிவிடும். இதையடுத்து, விளம்பரங்கள் வருவது குறைந்து விடும். இதேபோல, Privacy/User Experience/Ad Services பகுதியில் Personalized ad recommendations என உள்ள ஆப்ஷனை தேர்வு செய்தால் விளம்பரம் வருவது நின்றுவிடும்.

ஸியோமியை பொறுத்தவரையில், Recommendation என வரும் எந்த பகுதியும் விளம்பரம்தான் என அர்த்தம். எனவே, இந்த recommendation-களை தேர்வு செய்யும்போது கவனமாக இருந்தால், விளம்பரம் வருவதை கட்டுப்படுத்த முடியும்.