மளிகை கடைக்காரர் மனைவியிடம் அத்துமீறல்! ஜெயமோகனை நையப்புடைத்த கணவன்!

கன்னியாகுமரி அருகே பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், கடையில் வாங்கிய மாவு புளித்ததால் திருப்பிகொடுத்த போது ஏற்ப்பட்ட வாக்கு வாதத்தில், சரமாரியாக தாக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசித்து வரும் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் (வயது 60) தமிழ் மற்றும் மலையாளத்தில் பல பெயர் சொல்லும்  படைப்புகள் தந்துள்ளார். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விருதுகள் குவித்த முழு நேர எழுத்தாளர் சில சினிமாக்களுக்கும் கதை வசனம் எழுதியுள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன் நேற்று இரவு, பார்வதிபுரத்தில் உள்ள கடைக்கு  பொருட்கள் வாங்க சென்ற போது, புளித்த தோசை மாவை விற்ற  கோபத்தில், அதை திருப்பி கொடுத்து விட்டு கடைக்காரர் மனைவியிடம் வாக்குவாதம் செய்ததாகவும், ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த அவரின் கணவர் ஜெய் மோகனை நையப் புடைத்துள்ளார். 

படுகாயமடைந்த எழுத்தாளர் ஜெயமோகன்  நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் புகார் அளிக்கபட்டதை அடுத்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தன்னை ஜெயமோகன் தாக்கி அத்துமீறியதாக கூறி கடைக்கார பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.