மைசூர் பாக் யாருக்கு சொந்தம்! தமிழகத்திற்கு எதிராக போராட்டம் அறிவித்த கர்நாடகா! கடைசியில் ஏற்பட்ட திருப்பம்!

கர்நாடகாவில் எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதன் விளையாட்டுத் தனமாக பதிவிட்ட டிவிட்டர் பதிவு தமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தும் அளவுக்கு கொண்டு சென்று விட்டது.


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக சந்தித்த எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதன் அவருக்கு மைசூர் பாக் இனிப்பை வழங்கியுள்ளார். அந்த புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டதோடு மட்டும் அல்லாமல் "மைசூர் பாக்கிற்கான புவிசார் குறியீடு அந்தஸ்த்தை தமிழகத்திற்கு வழங்கியதற்காக நிர்மலா சீதாராமனை பாராட்டினேன்" என வேடிக்கையாக பதிவிட பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.

கர்நாடகாவில் உள்ள தொலைக்காட்சிகளும் இந்த விஷயத்தை பெரிதாக்கி செய்திகள் போட ஆரம்பித்தனர். கர்நாடகாவிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா சீதாராமனுக்கு இரட்டை முகம், தமிழகத்திற்குத்தான் ஆதரவாக செயல்படுகிறார் என தங்கள் விருப்பப்படி செய்திகள் பதிவிட்டனர்.

இதை கேள்விபட்ட வாட்டாள் நாகராஜ் போராட்டம் செய்யவும் தயார் ஆகிவிட்டார். அவர் அளித்த பேட்டியில், காவிரி, மேகதாது என பல விஷயங்களில் நாம் பொறுமையாக உள்ளோம். தற்போது மைசூர் பாக் அந்தஸ்தையும் தமிழகம் உரிமை கொண்டாடுகிறது. யாராக இருந்தாலும் உஷாராக இருந்து கொள்ளுங்கள் என பேச பல்வேறு கன்னட அமைப்பினர் போராட்டங்களை நடத்த ஆயத்தம் ஆகிவிட்டனர்.

நாம் ஏதோ காமடியாக பதிவிட பிரச்சனை வேறு திசைக்கு செல்வதை பார்த்த எழுத்தார் ஆனந்த் ரங்காதன், மீண்டும் ஒரு டிவிட் பதிவிட்டார். அதில் எந்த புவிசார் குறியீடும் தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை கேலியாகத்தான் ட்வீட் போட்டேன் என்று கூறியுள்ளார்.