பள்ளி குழந்தைகளுக்கு பரிமாறிய சத்துணவில் உயிரோடு நெளிந்த புழு! ஆண்டிப்பட்டி அதிர்ச்சி!

ஆண்டிப்பட்டி உள்ள பள்ளியில் வழங்கப்பட்ட மதிய சத்துணவில் புழுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதனை அறிந்த அரசு அதிகாரிகள் அதிர்ச்சியில் உரைந்தனர்.


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் இந்து மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் சிறப்பு திட்டமான மதிய சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், மதிய சத்துணவு திட்டத்தின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மதிய உணவு இப்பள்ளியில் உட்கொள்ளப்படுகின்றன.  

இதற்கிடையே, இந்து மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாணவ- மாணவிகளுக்கு சாம்பார் சாதம் வழங்கப்பட்டது. இதனை உட்கொண்ட மாணவ மாணவிகள், புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்கள். பின்னர் மாணவர்கள், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதனை அறிந்த ஆண்டிப்பட்டி ஒன்றிய ஆணையாளர் ஆண்டாள் மற்றும் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அப்பள்ளிக்கு விரைந்து ஆய்வு நடத்தினர்.

அரசு அதிகாரிகள், சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் விசாரணையில் நடத்தினர். இதைத்தவிர சத்துணவு சமைக்க பயன்படுத்தப்படுகிற அரிசி, காய்கறி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் உணவுப்பொருட்களில் புழுக்கள் எதுவும் காணப்படவில்லை.

மேலும், அரசு அதிகாரிகள் அதிகாரிகள் சத்துணவை சாப்பிட்டு பார்த்தனர். சமையலுக்கு பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சோதனைக்காக எடுத்து சென்றனர். சத்துணவில் புழுக்கள் இருந்ததாக இணையத்தில் வந்த புகைப்படம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.