விமானப்படையில் பயங்கரம்! உயர் அதிகாரியால் கதற கதற கற்பழிக்கப்பட்ட உலகின் முதல் பெண் போர் விமானி!

செனட் உறுப்பினரும் முன்னால் விமானப்படை வீராங்கனையுமான மார்த்தா மெக்சாலி தான் மேலதிகாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.


மார்த்தா மெக் சாலி அமெரிக்க போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையைப் பெற்றவர். தற்போதைய குடியரசுக் கட்சி உறுப்பினரான அவர் ராணுவத்தின் பாலியல் தாக்குதல் தொடர்பான அமெரிக்க செனட் விசாரணையில் பங்கேற்று பல்வேறு தகவல்களை தெரிவித்தார். 

தான் மேலதிகாரியால் பாலியல் பலாத்கார செய்யப்பட்டபோது அவமானமாக உணர்ந்தாலும் வெளியில் சொல்லவில்லை என்ற அவர், இந்த அமைப்பில் அதனை வெளியில் சொன்னால் அதற்கு பலன் இருக்கும் என தோன்றாததால் கூறவில்லை என்று தெரிவித்தார். மேலும் அப்போது தன்னை பலகீனமானவளாக உணர வில்ல்லை என்றும் அதிகாரமற்றவளாக உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் பல பெண்கள் பாலியல் பலாத்காரங்களைல் பொறுத்துக்கொண்டு பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதே போன்று ராணுவத்தில் லெஃப்டினன் கலொனலாக இருந்து ஓய்வு பெற்றவும் ஈராக் போரில் கால்களை இழந்தவருமான டாம்மி டக்வொர்த் என்பவர் தற்போது ஜனநாயகக் கட்சி உறுப்பினராக உள்ளார் .

ராணுவம் பாலியல் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்துவதில் முழுமையாகத் தோல்வி அடைந்து விட்டதாக அவர் தெரிவித்தார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கக் கடற்படையினர் தொடர்புடைய நிர்வாணப் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவத்தில் உள்ள பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.