85 ரன்களில் சுருண்ட உலக சாம்பியன் இங்கிலாந்து! தெறிக்கவிட்ட அயர்லாந்து பவுலர்கள்!

அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடப்பு உலகக் கோப்பை சாம்பியன் இங்கிலாந்து அணி 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.


சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து அணி முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. இதனை  இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது . 

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு  இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது .அயர்லாந்து அணியில் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர் .

இதனால் அடுத்தடுத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் . இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அதிர்ச்சி அளித்தது . 

அயர்லாந்து அணியின் மூர்டாக்  5 விக்கெட்களையும் ,மார்க் அடேர் 3 விக்கெட்களையும் வீழ்த்தி உலக கோப்பையை சாம்பியனான இங்கிலாந்து அணியை நடுங்க வைத்துள்ளனர்.