நவம்பர் 1 கொண்டாட தமிழர்கள் ரெடியா..? எடப்பாடி பழனிசாமிக்கு உலகத் தமிழர்கள் நன்றி

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவை உள்ளடக்கி ‘மெட்ராஸ் ராஜஸ்தானியையும்’ என ஒற்றை மாநிலமாக இருந்து வந்தது. இந்த சூழலை மாற்றி, தமிழ்நாட்டைத் தனி மாநிலமாக, மொழிவாரி மாநிலமாகப் பிரிக்க வலியுறுத்தி, சென்னை பொட்டி ஸ்ரீராமுலு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார்.


ஸ்ரீராமலு உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வன்முறை வெடித்தது. அதைத் தொடர்ந்து 1953ஆம் ஆண்டு, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் என மத்திய அரசிடமிருந்து அறிவிப்பு வெளியானது. 

இன்றைய தமிழகம் நிலப்பரப்பு அமைந்து 63 ஆண்டுகள் ஆகிறது நவம்பர் 1 அன்று. ஆந்திராவிடம் சித்தூர், நெல்லூர், திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடகத்திடம், கொள்ளேகால், மாண்டியாவில் சில பகுதிகள், கோலார் தங்கவயல், வெங்காளூர் என்று அழைக்கப்பட்ட பெங்களூரையும் இழந்தோம்.

கேரளத்திடம் பாலக்காடு பகுதியில் சில தமிழக கிராமங்கள், தேவிகுளம், பீர்மேடு பகுதி, தென்முனையில் நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை ஆகிய பகுதிகளை இழந்தோம்.

இதனால் குமரியில் நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் அடவி நயனாறு, செண்பகத் தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகர் அணை திட்டம், நாடறிந்த முல்லைப்

பெரியாறு பிரச்சினை, கொங்கு மண்ட லத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு, சிறுவாணி, பம்பாறு, பாண்டியாறு-புன்னம்புழா என சில நதிநீர் பிரச்சினைகள் நமக்கு சிக்கலாகி விட்டது.

அதைப்போன்று கர்நாடகத்திடம் காவிரி, தென்பெண்ணை, ஒகேனக்கல் பிரச்சினையும், ஆந்திரத்திடம் பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி என நீர் ஆதாரப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை நாம் இழந்த மண்ணால் இழந்தோம்.

நாம் பெற்றதோ தியாகசீலர் ம.பொ.சி., மங்களக்கிழார், விநாயகம் போன்றோர் பலரின் போராட்டத்தால் திருத்தணியைப் பெற்றோம். தென்முனை குமரியை பி.எஸ்.மணி, நேசமணி, குஞ்சன் நாடார், ரசாக் போன்றோருடைய தியாகமும், மார்த்தாண்டம் புதுக்கடையில் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 11 தியாகிகளின் ரத்தத்தில் தமிழகத்தோடு இணைந்ததுதான் குமரி மாவட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் தியாகி கரையாளருடைய மாசற்ற தியாகத்தால் செங்கோட்டை கிடைத்தது. ஆனால் நம்மோடு இணையவேண்டிய நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை ஆகியப் பகுதிகளை தர மறுத்தனர்.

 தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, காமராசர் உள்படப் பலர் போராட்டம் நடத்தியதன் விளைவாக 1956ம் ஆண்டு நவ. 1 ஆம் தேதி, மெட்ராஸ் மாகாணம், மெட்ராஸ் ஸ்டேட், ஆந்திரா, கர்நாடகா, கேரளா எனப் பிரிக்கப்பட்டது. தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நவ. 1ம் தேதியைத் தமிழ்நாடு நாள் எனக் கொண்டாடத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஆண்டுதோறும், பல்வேறு நிகழ்ச்சிகளை அரசு நடத்த முடிவு செய்துள்ளது.

எடப்பாடியார் அறிவிப்பை நம் தமிழக மக்கள் கண்டுகொள்ளாத நிலையில், வெளிநாட்டு தமிழர்கள் ஆர்வமாக வரவேற்று பாராட்டியுள்ளனர்.