கொரோனாவுக்கு பிறகு உலக கோடீஸ்வரர் பட்டியல் இது. எங்கே இருக்கிறார் முகேஷ் அம்பானி?

உலகில் உள்ள பணக்காரர்கள் பலர் கொரோனா வைரஸிலிருந்து தப்பித்தால் போதும் என்று தங்களது வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடிவிட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.


இந்த தொற்றுநோய் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கடுமையாக பரவி வருவதால், உலகளாவிய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலையில், உலகில் அதிக சொத்து மதிப்புடைய பணக்காரர்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை. 

உலகம் முழுவதும் 2,095 பேரை தேர்ந்தெடுத்து உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் என்று வரிசை படுத்தியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக உலகின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய ரூபாயில் அவரின் தற்போதைய சொத்து மதிப்பு 8 லட்சத்து 60 ஆயிரம் கோடியாகும்.

இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தக்க வைத்துக்கொண்டார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 44.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களுடன் உலக பில்லியனர்கள் பட்டியலில் 17 வது இடத்தையும். இந்தியாவில் முதலிடத்தையும் பிடித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நாடு முழுவதும் சுமார் 34 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மலிவான தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் சில்லறை வர்த்தகம் எண்ணெய் இறக்குமதி மற்றும் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது.

அதன்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 3 லட்சத்து 37 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திலும். உலக பணக்காரர்கள் பட்டியலில் 17வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் டி மார்ட் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் 1 லட்சத்து 27 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். ராதாகிருஷ்ணன் தமனி 2002ம் ஆண்டு புறநகர் மும்பையில் ஒரு சிறிய சில்லறை சூப்பர் மார்க்கெட் விற்பனையில் இறங்கினார், ராடிசன் ப்ளூ ஓட்டல்கள் மற்றும் மும்பைக்கு அருகிலுள்ள ஒரு பிரபலமான கடற்கரை ஆகியவை இவருடைய முக்கிய வருவாய் ஈட்டக்கூடிய சொத்துக்களாகும்.

தமிழகத்தைச் சேர்ந்த எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிவ் நாடார் 95 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் உலக அளவில் 114 வது இடத்தை பிடித்துள்ளார். 93 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் ஹிந்துஜா குழுமத்தின் சகோதரர்கள் 116 வது இடத்திலும்.

81 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் கோட்டக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோட்டக் 138வது இடத்தையும். பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் 154வது இடத்தையும் பிடித்துள்ளனர். 

மணியன் கலியமூர்த்தி