இந்தியாவின் தேவதை சிந்துக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிகிறது!

உலக பேட்மின்டன் போட்டியில் தங்கம் வென்று சரித்திர சாதனை படைத்திருக்கிறார் பி.வி.சிந்து.


அவருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன. பி.வி.சிந்து ஐயமே இல்லாமல் இந்திய இறகுப்பந்து வரலாற்றின் உச்சம். இரண்டு முறை வெள்ளியோடு வீடு திரும்பிய அவர், இன்று உலக சாம்பியன்ஷிப்பை உச்சி முகர்ந்துள்ளார். த

ன்னுடைய அன்னையின் பிறந்தநாளில் கிடைத்த வெற்றியை, அன்னைக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளார். ஆடுகளங்களில் எகிறி அடித்து ஆடிய தன்னுடைய அன்னைக்கு இதைவிட பெரிய பிறந்தநாள் பரிசு என்ன இருக்க முடியும்?

110 நிமிடங்களில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் தோல்வியை உலக கோப்பை இறுதிப்போட்டியில் சிந்துவிற்கு தந்திருந்தார். கடந்த 15 இறுதிப்போட்டிகளில் 11 ல் தோல்வியைத் தழுவியிருந்த சிந்து இன்று ஆடிய ஆட்டம் கள ஆதிக்கத்தின் உச்சம். 37 நிமிடங்களில் துரிதமாக சுழன்றடித்து வென்றிருக்கிறார்.

ஒரே சமயத்தில் ஆசியப்போட்டிகள், காமன்வெல்த், ஒலிம்பிக்ஸ், உலக சாம்பியன்ஷிப் என நடப்பு நிகழ்வுகள் நான்கிலும் பதக்கம் பெற்ற சாதனைக்குரிய ஒரே பெண் சிந்து என்பதே போதும். 'உனக்குலாம் எதுக்கு இது?' என்கிற ஆரம்பகட்ட ஏளனங்களில் இருந்து இவ்வளவு தூரம் சிந்து பயணித்து வந்திருப்பது நமக்கான பெருமிதம். களங்களை நம் வீட்டுப்பெண் குழந்தைகள் நிறைக்கையில் எல்லாம் நிகழும் அற்புதங்களின் அசைக்க முடியாத அடையாளம் அவர்.

ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர் என்று அத்தனை பேரும் பாராட்டித் தள்ளியிருக்கிறார்கள். இவருக்கு வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

எப்பேர்பட்ட வெற்றி... வெல்டன் சிந்து.