கிரேக்கமும் இல்லை! ஆப்ரிக்காவும் இல்லை! உலக வரலாறு துவங்கியது தமிழகத்தில் தான்! வரலாற்றை திருத்தி எழுதிய கீழடி அகழ்வாராய்ச்சி! பார்ட் - 1!

உலக வரலாறு தமிழகத்தில் இருந்து தொடங்கப்பட வேண்டும் உறுதிப்படுத்தும் கீழடி ஆய்வு.


தமிழ்நாட்டில் அண்மையல் மேற்கொள்ளப்பட்ட அல்லது அண்மையில் கவனத்தை ஈர்த்த 3 அகழாய்வுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் கீழடிக்கான முக்கியத்துவத்தை தமிழகம் போராடிப் பெற்றிருக்கிறது. இதேபோன்ற கவனத்தை பெறாமல் போய்விட்ட 2 அகழாய்வுகளில் இருந்துதான் கீழடிக்கான முக்கியத்துவம் அமைந்துள்ளது. அவை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அத்திரம்பாக்கம் மற்றும் பட்டறைப்பெரும்புதூர் தொல்லியல் ஆய்வுகள்.

ஹோமோ சேப்பியன்ஸ் என்று குறிப்பிடப்படும் இன்றைய மனி்தகுலம் ஆப்பிரிக் கண்டத்தில் இருந்தே உலகம் முழுதும் பல்கிப் பெருகியது என்பது, அவுட் ஆஃப் ஆப்ரிக்கா கோட்பாடு என குறிப்பிடப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தொல்லியல் மற்றும் அகழாய்வுச் சான்றுகள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில், இந்திய துணைக் கண்ட பகுதிக்கு, நடுப் பழங்கற்காலம் என்பது, ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களால் 1 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டுவரப்பட்டது என கருதப்பட்டு வந்தது.

ஆனால் சென்னைக்கு வடமேற்கே அமைந்துள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்த நடுப் பழங்கற்கால கருவிகள் இந்த கருத்தை புரட்டிப் போட்டுவிட்டன. 3 லட்சத்து 85 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அத்திரம்பாக்கத்தில் வாழ்ந்தவர்களால் கற்கருவிகள் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது ஆய்வில், அறிவியல் முறைப்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேகாலகட்டத்தில்தான் ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நடுப் பழங்கற்காலம் உருவாகியுள்ளது. 3 லட்சத்து 85 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்கி, 1 லட்சத்து 72 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை நடுப் பழங்கற்காலம் வளர்ச்சியடைந்ததை அத்திரம்பாக்கத்தில் கிடைத்த கற்கருவிகள் உறுதிப்படுத்துவதை ஆய்வாளர்கள் "நேச்சர்" என்ற சர்வதேச அறிவியல் இதழில் விரிவான ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். 

இந்த கருவிகளை செய்தது யார், ஹோமோ சேப்பியன்ஸ் என்ற இன்றைய மனித இனமா அல்லது நியாண்டர்தால் எனக் குறிப்பிடப்படும் அழிந்துபோன இனமா என்பதை உறுதிப்படுத்துவதற்கு உரிய புதைபடிவச் சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும் அவுட் ஆஃப் ஆப்பிரிக்கா கோட்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை அதிரம்பாக்கம் ஆய்வுகள் உருவாக்கியுள்ளன.