உலகின் மிக ஆபத்தான லேப்டாப் இது தான்! விலை ரூ.8.5 கோடி! ஏன் தெரியுமா?

உலகின் மிக ஆபத்தான லேப்டாப் ஒன்று எட்டரை கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.


உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கும் அந்த லேப்டாப் வெறும் 10 அங்குலம் அளவே கொண்டது. 2008 மாடலான அந்த லேப்டாப் விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்கக் கூடியது. இந்த லேப்டாப்பை கண்டு உலகமே நடுங்க முக்கிய காரணம் என்னவென்றால் அபாயகரமான ஆறு வைரஸ்கள் இதில் உள்ளன. ஐ லவ் யூ, மை டும், சோபிக் உள்ளிட்டவை தான் அந்த ஆறு வைரஸ்கள். அண்மையில் பல்வேறு நாடுகளின் வங்கி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் கணக்குகளில் புகுந்து விளையாடிய வான்னா கிரை வைரஸும் இந்த லேப்டாப்பில் இருந்து தான் பரவியது. 2015ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்டிப்படைத்த பிளாக் எனர்ஜி என்ற வைரஸும் இந்த நாட்டில்தான் செயல்பாட்டில் உள்ளது. இவ்வளவு ஆபத்து மிக்க இந்த சாம்சங் லேப்டாப் தான் தற்போது உலகின் மிகவும் அபாயகரமான லேப்டாப்பாக கருதப்படுகிறது. இதை ஏலத்தின் மூலம் விற்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. தற்போதுவரை எட்டரை கோடி ரூபாயாக இதன் விலை உள்ளது.