100 கோடி பேரின் கண்ணீர்! கடைசி வரை போராடிய ஜடேஜா! தேங்க் யூ இந்தியா!

100 கோடி பேரின் கண்ணீருடன் உலக கோப்பையில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி வெளியேறியுள்ளது.


2011ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தான் உலக கோப்பையை வெல்லக்கூடிய வல்லமையுடன் இந்திய அணி இங்கிலாந்து சென்றது. துவக்கம் முதலே நேர்த்தியான ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தி வந்தது. முக்கிய அணிகளான ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தானை எளிதாக இந்தியா வீழ்த்தியது.

இதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா. பேட்டிங், பந்து வீச்சு என இந்தியா சிறப்பாக செயல்பட்டதால் அரையிறுதியில் நியுசிலாந்தை இந்தியா எளிதாக வீழ்த்தும் என்று கணிக்கப்பட்டது. 

இதனை உண்மை என்று சொல்வது போல் நியுசிலாந்து அணியை 240 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது இந்திய அணி. ஆனால் பேட்டிங்கில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியால் சோபிக்க முடியவில்லை. ஆனால் தனி ஆளாக ஜடேஜா இந்திய அணிக்காக போராடினார். இதனால் இந்திய ரசிகர்கள் ஒரு எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால் மைதானத்தின் நிலை மற்றும் நியுசிலாந்தின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் ஜடேஜாவால் தாக்குபிடிக்க முடியவில்லை. கடைசி வரை அவர் போராடியும் வெற்றி எட்டாக் கனியாகிவிட்டது. இதே போல் தோனியும் தனது அனுபவத்தை கொண்டு முயன்றும் பலன் அளிக்கவில்லை. இதனால் இன்றைய போட்டியை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் எப்படியும் ஒரு 100 கோடி பேருக்கு கண்ணீர் வந்திருக்கும்.

தோல்வி என்பது பாதித்தாலும் கூட இந்த உலக கோப்பையில் நாம் மகிழ்ச்சி அடைய எவ்வளவோ விஷயம் இருக்கிறது. எனவே இந்திய அணிக்கு கண்டிப்பாக நாம் தேங்க் யூ சொல்லித்தான் ஆக வேண்டும்.