நயன்தாராவின் கணவன் ஆகப்போவது யார்? உலக கோப்பை வைரல் ஜோதிடரின் ஷாக் கணிப்பு!

உலகக் கோப்பை கிரிக்கேட் போட்டியின் முடிவுகளை கணித்த சேலத்தை சேர்ந்த ஜோதிடர் நடிகை நயன்தாராவின் திருமணம் இந்த ஆண்டு நடைபெறும் என கணித்துள்ளார்.


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து கோப்பையை வென்ற நிலையில் நியூசிலாந்து 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதனைப் பல மாதங்களுக்கு முன்பே கணித்த சேலத்தை சேர்ந்த பாலாஜி ஹசன் ஒரே இரவில் பிரபலம் அடைந்துள்ளார். முக்கியமாக கானே வில்லியம்சன் தொடர் நாயகனாவார் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

மெக்கானிக்கல் இஞ்சினியரான பாலாஜி ஹாசன் தற்போது மற்றுமொரு ஜோதிடக் கணிப்பை வெளியிட்டுள்ளார். லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா 2019-ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொள்வார் என்பது தான் அது. 

நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் பல ஆண்டுகளாக காதலித்து வருவது அனைவரும் அறிந்தது இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதும் அனைவரும் அறிந்த செய்தி. இந்நிலையில் ஜோதிடர் பாலாஜ் ஹாசனின் வாக்கு பலிக்குமா என்பது இனிமேல் தான் தெரியவரும்