முழுவதும் தங்கம்! உட்காரும் இடத்தில் வைரம்! உலகிலேயே காஸ்ட்லி கக்கூஸ் கோப்பை! எவ்வளவு தெரியுமா?

சீனாவில் உலக அளவில் விலை உயர்ந்த கழிவறை தொட்டியை படைத்து கண்காட்சிக்கு வைத்துள்ளனர். இது கின்னஸ் சாதனையிலும் இடம் பிடித்துள்ளது.


சீனாவின் ஷாங்காய் நகரில் கண்காட்சியில் வைக்க பட்டுள்ள ஒரு கழிவறை தொட்டி ஒட்டு மொத்த உலக கவனத்தையும் இழுத்துள்ளது எனலாம். அதிலும் 335 கேரட் தங்கத்தில், 40 ஆயிரத்திற்க்கும் மேலான வைர கற்கைகளை கொண்டு மிக நேர்த்தியான வேலைப்பாடுகளை கொண்ட இந்த கழிவறை தொட்டி, துப்பாக்கி குண்டு துளைக்க முடியாத, புல்லட் புரூப் என சொல்லபடுகிறது.

மேலும் ஆரோன் ஷம் என்ற கடையில் தான இந்த கழிவறை தொட்டி வடிவமைக்கபட்டுள்ளதாக, அதன் உரிமையாளர் இந்த அழகிய கழிவறை தொட்டியை, விற்க மனம் இல்லாமல் மக்கள் பார்வைக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக காணப்படும் தங்க வைரம் கொண்ட வேலைப்பாடுகளை விட இந்த கழிவறை தொட்டி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது