அடி வயிற்றில் கடுமையான வலி..! ஏழரை கிலோவிற்கு வளர்ந்திருந்த கிட்னி! அதிர்ச்சியில் உறைந்த டாக்டர்கள்!

டெல்லியில், உலகின் மிக பெரிய அளவிலான கிட்னியை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள்.


மனித உடலில் மிக முக்கியமான உறுப்பாக இருக்கும் கிட்னி வாழ்வாதரமாக இருக்கிறது, அதிலும் அது மிக அத்தியாவசிய உறுப்பு என்பதால் அதன் மீது அக்கறை அதிகமாக காண்பிப்போம்  சராசரியாக ஒரு மனித கிட்னியின் அளவு 120 கிராம் முதல் 150 கிராம் வரை தான் இருப்பது வழக்கம், ஆனால் அறுவை சிகிச்சையின் போது அதைவிட 4.5 கிராம் மடங்கு அதிகமாக உள்ளது.

அதாவது 7.4 கிலோ வரை எடைக் கொண்ட கிட்னி, நோயாளியை ஸ்கேன் செய்து பார்த்த போது கிட்னியின் எடை இவ்வளவு அதிகம் என தெரியாது எனவும், அறுவை சிகிச்சை செய்த போது தான் இவ்வளவு பெரியது என கண்டறிந்துள்ளதாகவும், டெல்லியில் பிரபல தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் இது வரை இந்த எடையை கொண்ட கிட்னி இது வரையில் யாருக்கும் இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், நோயாளிக்கு எந்த சேதாரமும் இல்லாமல், மருத்துவர்கள் மிக நேர்த்தியாக அந்த 4 மடங்கு பெரிய கிட்னியை நீக்கியதை உலக கின்னஸ் சாதனையில் சேர்க்க பரிந்துரை செய்யபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மகத்தான சாதனைக்காக மருத்துவர்களுக்கு சமூக வலைதளத்தில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.