மோடி டி-சர்ட்டுன் காங்கிரஸ் அலுவலகத்தில் வேலை! அப்பாவி ஏழை இளைருக்கு நேர்ந்த விபரீதம்!

நரேந்திர மோடியின் பெயர் கொண்ட டி-சர்ட்டை அணிந்து காங்கிரஸ் அலுவலகத்தில் பணியாற்றிய நபர் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தியும், பாஜக சார்பாக மோடியும் பிரதமர் பதவிக்கு மோதுகின்றனர். இந்நிலையில்,  ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஒருவர் போஸ்டர் ஒட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அது விசயமில்ல.

அவர் 2018ம் ஆண்டு நடைபெற்ற மோடி தொடர்பான நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருக்கிறார். அந்த நிகழ்ச்சி தொடர்பாக அச்சடிக்கப்பட்ட டி-சர்ட்டை அணிந்தபடி, ராகுல் காந்திக்கு போஸ்டர் ஒட்டும வேலையை செய்திருக்கிறார். இதை சக கட்சி நிர்வாகிகள் போட்டோ பிடித்து, சமூக ஊடகங்களில் பகிர, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

இதையடுத்து, குறிப்பிட்ட நபரை வேலையில் இருந்து நீக்குவதாக காங்கிரஸ் அலுவலகம் அறிவித்தள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி பார்மர் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த நிகழ்வின்போது பார்வையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட டி-சர்ட்டையே அந்த பணியாளர் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மோடி டி சர்ட் அணிந்த காரணத்தினால் ஒருவரை வேலையை விட்டு நீக்குவது தான் சகிப்புத்தன்மையா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.