பாத்ரூம் கதவு என நினைத்து ரயில் கதவை திறந்த பெண்! பிறகு அரங்கேறிய விபரீதம்!

சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் படுகாயம் கழிவறை செல்வதாக சென்று ஏறும் இறங்கும் வழியில் தவறுதலாக சென்றதால் தவறி விழுந்து படுகாயம்.


சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் படுகாயம் கழிவறை செல்வதாக சென்று ஏறும் இறங்கும் வழியில் தவறுதலாக சென்றதால் தவறி விழுந்து படுகாயம்  

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கண்ணடிகுப்பம் பகுதியில் சென்னையில் இருந்து 9.15 மணிக்கு புறப்பட்ட காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூர் கன்டோன்மென்ட் பகுதியை சேர்ந்த நடராஜன்  அவரது மனைவி உமாதேவி தனது வீட்டிற்கு செல்வதற்காக அதில் பயணம் செய்து வந்துள்ளார் அப்போது ஆம்பூர் அடுத்த கண்ணடிகுப்பம் என்ற பகுதிக்கு நள்ளிரவு 12.52 மணிக்கு ரயில் வந்தபோது திடீரென கழிவறைக்கு செல்வதாக சென்றுள்ளார்.

அப்போது தூக்க கலக்கத்தில் உமாதேவி பயணிகள் ஏறி இறங்கும் வழியில் மாறுதலாக சென்றபோது  திடீரென தடுமாறி கீழே விழுந்து அவர் இரவு முழுவதும் சுமார் 7 மணி நேரம் ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள முட்புதரில் படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார் பின்னர் அவரை மீட்ட  அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தனர் பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு தற்போது கொண்டு சென்றுள்ளனர் இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்