குழந்தை பிறந்த முதல் நாள் மருத்துவமனையில்தான் தங்க வேண்டும், ஏன் தெரியுமா?

குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது என்றாலும், முதல் நாள் மருத்துவமனையில் தங்கிவிட்டு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துவதுண்டு. குழந்தை பெற்றபிறகு எதற்காக ஒரு நாள் மருத்துவமனையில் தங்குவது நல்லது என்பதை பார்க்கலாம்.


தொப்புள்கொடி இணைந்திருந்த பகுதியில் இருந்து வெளியேறும் ரத்தப்போக்கு நிற்கும் வகையில் கர்ப்பப்பை சுருங்கிவிட வேண்டும்ஏதேனும் காரணங்களால் திடீரென அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதற்கும், ரத்தசுழற்சி மாற்றம் காரணமாக தாய்க்கு இதய பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

இன்றைய நவீன மருத்துவம் காரணமாக பிரசவத்தில் மரணம் அடைவது குறைந்துவிட்டது என்றாலும், கர்ப்பிணியை எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டியது அவசியம்.குறிப்பாக ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்னை இருக்கும் பெண்கள் அவசியம் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும்.

பொதுவாக பிரசவத்திற்கு பிந்தைய 6 வாரங்கள் பியூர்பெரியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆறு வாரங்களும் பிரசவித்த பெண்ணுக்கு நல்ல ஓய்வும், சத்தான உணவும், ஆறுதலும் கொடுக்கவேண்டியது அவசியமாகும்.