பாலியல் உறவுக்கு மறுப்பு! உயிரோடு எரிதக்கப்பட்ட 2 குழந்தைகளின் தாய்! பிறகு நேர்ந்த விபரீதம்!

ஆசைக்கு இணங்காத பெண்ணை எரித்தவன் செய்தவன் கைது செய்யப்பட்டான்.


உத்தரப்பிரதேசம் மாநிலம் டியோரியா மாவட்டம் பாட்னி என்ற ஊரை சேர்ந்தவன் திலீப் ராஜ்பார். இவன் அதே ஊரில் உள்ள இரு குழந்தைகளுக்கு தாயான பெண்ணிடம் அடிக்கடி அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் அவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் சனிக்கிழமை அன்று காலை அவனது குரூரம் எல்லை மீறியது. தனது இரு குழந்தைகளுடன் 35 வயதான அந்த பெண்மணி இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிட்டுள்ளார்.

ஆசைக்கு இணங்க மறுத்ததுடன் கூச்சலும் போட்டதால் ஆத்திரமடைந்த திலீப் பெட்ரோலை ஊற்றி அந்தப் பெண்ணை தீ வைத்து எரித்து உள்ளான். தனது தாயை காப்பாற்ற இரு குழந்தைகளும் தீயை அணைத்து உள்ளன. 3 பேரும் பலத்த தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அந்தப் பெண்ணுக்கு 90 விழுக்காடு தீக்காயம் இருப்பதால் அவர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இரு குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொடூரன் திலீப்பை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகார் அளித்தபோது கைது செய்து வந்தால் ஒரு பெண்ணின் உயிர் ஊசலாடுவதற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது.