குளிர்பானத்தில் மயக்க மருந்து! 1 மணி நேரம் உல்லாசம்! பிரேசில் மாணவிக்கு இந்தியாவில் நேர்ந்த விபரீதம்!

சென்னை: சக ஆண் வழக்கறிஞர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண் வழக்கறிஞர், ஏற்கனவே முன்னாள் அமைச்சர், நீதிபதி உள்ளிட்டோருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் 52 வயது பெண் ஒருவர் வழக்கறிஞராக பயிற்சி செய்துவருகிறார். இந்நிலையில், இவர் தன்னுடன் பணிபுரியும் சக ஆண் வழக்கறிஞர் ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இதன்பேரில், மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன் தலைமையில், சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு நடத்திய விசாரணையில், குறிப்பிட்ட பெண் தனது வேலையில் பலன் பெறுவதற்காக, முன்னாள் அமைச்சர் மற்றும் துணை நீதிபதி உள்ளிட்டோருக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்ததாக தெரியவந்துள்ளது. இந்த தவறை மறைப்பதற்காகவே, வேண்டுமென்றே சக வழக்கறிஞர் மீது பொய்ப்புகார் சொன்னதாகவும் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதுதவிர, தனது தவறுக்காக, அவர் மன்னிப்பும் கோரியுள்ளார். இதையேற்றுக் கொண்ட விசாரணைக் குழு ''இந்த வயதில் ஒரு பெண் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுவது சாதாரண விசயமல்ல. குறிப்பிட்ட பெண் தனது தவறை ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில், அவரை தண்டித்தால், அது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த தொழிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும். எனவே, அந்த வழக்கறிஞர் தெரிவித்த மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறோம். இதன்பேரில், அவர் அளித்த வீண் புகார்கள் அனைத்தையும் இத்தோடு முடித்து வைக்கிறோம். அந்த பெண் இனி தனது தொழிலில் மட்டும் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கிறோம்,'' எனக் கூறியுள்ளது. 

இந்த சம்பவம் தமிழக மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வட்டாரத்தில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அந்த பெண் வழக்கறிஞரின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை.