திருவண்ணாமலையில் உள்ள செய்யாறு பகுதியில் தன்னுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் மஞ்சுளா எனும் பெண்.
உல்லாசமாக இருக்கும் போது தகராறு! கள்ளக் காதலனை போட்டுத்தள்ளிய கள்ளக் காதலி! செய்யாறில் பயங்கரம்!
செய்யாறு அருகே உள்ள பிரம்மதேசம் எனும் பகுதியில் வசித்து வந்த மஞ்சுளா எனும் பெண்ணிற்கும், அருகிலுள்ள கிராமமான சிறுவளையம் என்னும் பகுதியில் வசித்துவந்த சிட்டிபாபு என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரியவந்துள்ளது.
இவர்களின் உறவை அறிந்த மஞ்சுளாவின் கணவரும் சிட்டிபாபுவின் மனைவியும் இவர்களை விட்டு நீண்ட காலமாக பிரிந்து இருக்கின்றனர். நேற்று மாலை நேரம் மஞ்சுளா மற்றும் சிட்டிபாபு இருவரும் தனியே ஒரு பகுதியில் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சண்டை அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. அதில் ஆத்திரமடைந்த மஞ்சுளா சிட்டிபாபுவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து விட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்