என் கணவன் திருநங்கையாக மாறிட்டார்! நான் இப்போ என்ன செய்றது? தவிக்கும் மனைவி!

சென்னையை சேர்ந்த மணிமேகலை நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்தார் அதில் கணவர் ஜீவனாம்சம் தரும்படி கோரிக்கை இருந்தது.


1998ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த மணிமேகலைக்கும் , ராமானுஜம் என்பவருக்கும் திருமணமானது. ஆனால் அவர்களின் இருவருக்கும் எந்த தாம்பத்ய உறவும் ஏற்படவில்லை.

மேலும், அவருக்கு மருத்துவ சிகிச்சை எடுத்தும் சரியாகவில்லை. பிறகு 2009-ஆம் ஆண்டு மணிமேகலையை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். அதன் காரணமாக அந்த பெண், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்தார். மேலும், அந்த மனுவில், ஒரு வீடு, ரூ.10 லட்சம், மாதம்தோறும் ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, ராமானுஜம் தான் திருநங்கையாக மாறிவிட்டதாக தெரிவித்ததுடன், அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பில், திருமணம் முடிந்து கணவன்-மனைவி என்ற உறவு முழுமையடைய அவசியமான தாம்பத்திய உறவு பூர்த்தி அடையவில்லை என்று இருவரும் ஒப்புக்கொண்டு உள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் மூன்றாம் பாலினத்தவரின் சிறப்பு உரிமைகளை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அதில் நீதிபதிகள் குறிப்பிடுவது, ராமானுஜம் தான் பிச்சை எடுப்பதாகவும், அரசின் ஆதரவில் இருப்பதாகவும் கூறியுள்ளார் .

இந்து முறைப்படி திருமணம் நடந்துவிட்டது என்ற ஒரே காரணத்துக்காக ஜீவனாம்சம் கொடுக்க கடமைப்பட்டவர் என்று தீர்மானிக்க இயலாது. எனவே ஜீவனாம்சம் பெற தகுதி இல்லை என்று கூறி அந்தமனுவை தள்ளுபடி செய்கிறேன் என கூறியுள்ளார். திருநங்கையாக மாறி பிச்சையெடுத்து வருவதால் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.