தலைமுடியை பிடித்து இழுத்து, கன்னத்தில் ஓங்கி ஒரு அறை! போலீசிடம் சிக்கிய பெண் வேட்பாளருக்கு நேர்ந்த பரிதாபம்!

திருச்சியில் பரப்பு காவல்துறைக்கும் வேட்பாளராக்கும் இடையே கடும் வாக்கு வாதம்!


உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்று இருக்கும் வேளையில் திருச்சியில் சுயேச்சை வேட்பாளர் ஆனா பெண் ஒருவர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரிக்குள் புகுந்து வாக்கு எண்ணிக்கை நிறுத்த சொல்லி வாக்குவாதத்தில் இடுப்படார். இந்த நிகழ்வு அப்பகுதியில் மிகவும் பரப்பை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது. இந்நிலையில், இன்று திருச்சியில், 45 ஊராட்சி 25 ஒன்றியம் 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  இதில், லால்குடி பகுதியில் 20 வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டவர் தான் செல்வராணி. 

இவர் திடீரென வாக்கு எண்ணிக்கை நடைபெறும் குமுலூர் வேளாண்மை பொறியியல் கல்லூரிக்குள் புகுந்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும் படி கூறியுள்ளார். அதனைக் கண்டு குழப்பம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது செல்வராணி, வாக்குப்பதிவின் போது மதியத்திற்கு மேல் என்னுடைய சின்னம் வாக்குச் சீட்டில் இல்லை என்றும் மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால், இவரை கண்டு கொள்ளாத அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாக்கு எண்ணிக்கையை முடிப்பதிலேயே குறியாக இருந்தனர். அதனால், இந்த வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று கூறி சத்தம் இட்டுள்ளார். செல்வராணி குரலுக்கும் செவி சாயக்காத அதிகாரிகள், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த முடியாது என்றும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். 

அதனைக் கேட்காத செல்வராணி அதிகாரிகளுடன் மேலும், கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினருக்கும் செல்வராணிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

கடும் வாக்கு வாதத்திற்கு பிறகு ஆத்திரமடைந்த காவல்துறையினர் செல்வராணி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், அவரை கைது செய்யும் முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் மிகவும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.