பெண்களுக்கு மார்பகங்கள் எப்போது எல்லாம் பெரிதாகும்? ஒரு மெடிக்கல் ரிப்போர்ட்!

பெண்களுக்கு மார்பகங்கள் பெரிதாவதற்கு சிலருக்கு உணவுமுறையும், சிலருக்கு தாய்மை அடையும்போதும் மார்பகங்கள் பெரிதாக வளர்ச்சி அடைகிறது.


பொதுவாக பெண்களின் உடைல் எடை அதிரிக்கும்போது மார்பகங்களின் வளர்ச்சி கூடும். அதற்குக் காரணம் மார்பக திசுக்களில் கொழுப்புத் திசுக்களின் அளவும் அதிகரிக்கிறது. மேலும் உடல் எடையும் அதிகரிக்கக்கூடும். அதேபோல் கர்ப்பக் காலத்தில் பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் மார்பகங்களின் அளவு அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

சிலர் அடிக்கடி கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வந்தாலும், மார்பகங்களின் வளர்ச்சி கூடும் எனவும் அதற்குக் காரணம் கருத்தடை மாத்திரைகளில் மார்பகங்களின் வளர்ச்சிக்கு காரணமான ஈஸ்ட்ரோஜென் அதிகம் உள்ளதாக மருத்துவம் கூறுகிறது. பெண்கள் பூப்பெய்யும்போது அவர்களது உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரித்தாலும் மார்பகங்களின் அளவில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும்.

இதுமட்டுமின்றி உடலுறவு சமயத்தில், இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பதால், மார்பகங்கள் பெரிதாகும். அந்த சமயத்தில் மார்பகங்கள் பெரிதாகும்போது நரம்புகளும் தெளிவாக தெரியும் மார்பகங்களில் ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்டிரோன் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மார்பகங்கள் பெரிதாக வளர்ச்சி அடைந்தது போல் காட்டும்.

மாதவிடாய் சுழற்சிக்கு முன் ஏற்படும் நீர்த்தேக்கத்தால், மாதவிடாய் சுழற்சியின் போது மார்பகங்கள் பெரிதாக காணப்படும். இறுதி மாதவிடாய்க்கு பின்னர், கொழுப்புச் செல்கள் வீங்கி பெரும்பாலான பெண்களுக்கு மார்பகங்களின் அளவை பெரிதாக்கிக் கொண்டே செல்லும்.