ஈரோடு அதிர்ச்சி! 16 வயது சிறுமியை காம வலையில் வீழ்த்தி நகைகளை லவட்டிய பலே பெண்மணி!

ஆண் வேடமிட்டு சிறுமியின் நகைகளை திட்டமிட்டு திருடிய பெண்ணை ஸ்கெட்ச் போட்டு பிடித்து அசத்திய ஈரோடு போலீசார்.


ஈரோடு பகுதியில் வசித்து வந்த சிறுமி (பெயர் குறிப்பிடவில்லை), தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று வந்தபோது அங்கு  விஷ்ணு பாலா என்பவர் நானும் உன் உறவினர் தான் என சிறுமியிடம் அறிமுகமாகி, தொடர்ந்து பேசி பல ஆசை வார்த்தைகள் காட்டி காதல் வலையை விரித்துள்ளார். அவர் விரித்த காதல் வலையில் விழுந்த இந்த சிறுமி, அவர் சொல்வதெல்லாம் செய்து வந்தார்.

மேலும் 16 வயது சிறுமிக்கு காமக் கதைகள் கூறி காம வலையிலும் வீழ்த்தியுள்ளார். இதனால் விஷ்ணு பாலா என்ன கூறினாலும் கேட்கும் நிலைமைக்கு சிறுமி வந்துள்ளார். இதனை அடுத்து அந்த சிறுமியிடம் 15 சவரன் மற்றும் 3 சவரன் நகைகளை வறுமையை காரணம் காட்டி நடித்து வாங்கி செலவழித்து வந்துள்ளார் விஷ்ணு பாலா.

வீட்டில் நகைகள் குறைவதை அறிந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோது அவர் அளித்த விவரங்களால் சந்தேகப்பட்டு, போலீசிடம் சென்றனர்.பின்னர் போலீசார் திட்டமிட்டு சிறுமியின் செல்போனிலிருந்து விஷ்ணு பாலாவை அவரது வீட்டிற்கு வருமாறு பேசச் சொல்லியுள்ளனர்.

சிறுமியின் வார்த்தை கேட்டு வீட்டிற்கு வந்த விஷ்ணு பாலாவை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரித்ததில், அவர் ஆண் அல்ல பெண் எனும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து சிறுமியின் நகைகளை மீட்டுள்ளனர் போலீசார். அதாவது விஷ்ணு பாலா ஆண் வேடமிட்டு சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி காமக்கதை கூறி வசியப்படுத்தியுள்ளது தெரியவந்தது.