அரை குறை ஆடையுடன் இளம்பெண் மசாஜ்! உலகம் முழுவதும் நேரலை செய்த விபரீதம்!

மசாஜ் மையத்திற்குச் சென்ற இளம்பெண்ணை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து, மற்றொருவருக்கு லைவ் ஒளிபரப்பு செய்துள்ளனர்.


தொழில்நுட்ப வளர்ச்சியால் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் புதுவடிவம் பெற்று வருகின்றன. இதன்படி,  மசாஜ் செய்ய சென்ற பெண்ணை, பலான படங்களில் வருவதுபோல, அப்படியே லைவ்வாக படம்பிடித்து, மற்றொரு அறையில் இருந்த ஆண் வாடிக்கையாளருக்கு வீடியோவாக காட்டியுள்ளனர். இதில் என்ன தவறு என்றால், இதனை வீடியோகாலில் நேரடியாக ஒளிபரப்பியுள்ளனர்.

மேலும் சில சமூக வலைதளங்களிலும் லைவ் செய்துள்ளனர். தன் அருகே உள்ள ஒரு ஐஃபோனில் இருந்து அடிக்கடி சத்தம் வரவே, அந்த பெண் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்து பார்த்துள்ளார். அப்போது அதில், அரைகுறை ஆடைகளுடன் ஒரு ஆண் வீடியோ காலில் இருப்பதை பார்த்து, கடும் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், உடனடியாக, அங்கிருந்து வெளியேறி, மசாஜ் சென்டர் நிர்வாகிகளை லெப்ட் ரைட் வாங்கியுள்ளார். 

இந்த விசயத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அப்பெண், தன்னிடம் இருந்து வசூலித்த மசாஜ் கட்டணத்தை திருப்பி செலுத்தவும் முறையீடு செய்துள்ளார். இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று கேட்கறீர்களா, சீனாவில் உள்ள ஹூபெய் மாகாணத்தின் வூஹான் நகரில் உள்ள ஜியு லைஃப் ஸ்பா என்ற இடத்தில்தான் இது நிகழ்ந்துள்ளது.

லைவ் மசாஜ் வீடியோவை, பக்கத்து அறையில் உள்ள இளைஞருக்கு, வீடியோ காலில் அனுப்பி தொழில் செய்த அந்த ஸ்பா நிறுவனத்திற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.