என் கணவன் அங்க தான் இருக்கார்..! அதான்..! மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நடந்தே சென்ற மனைவி! நெகிழ்ச்சி காரணம்!

கொரனாவால் உலகமே ஊரடங்கில் இருக்கும் நிலையில் கணவனுக்கு உதவுவதற்காக பெண் ஒருவர் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நடந்தே சென்ற சம்பவம் நடந்துள்ளது.


இந்தியாவை போலவே மலேசிய அரசாங்கமும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கை பிறப்பித்து உள்ளது. இதனால் சிங்கப்பூர், மலேசியா இடையேயான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வர நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலேசியாவை சேர்ந்த ஹெர்மன் என்பவர் தன்னுடையை பேஸ்புக் பதிவில் தனது தாயரை பற்றி குறிப்பிட்டுள்ளார். இவர் மனைவி மற்றும் குழந்தையுடன் ஜோகூர் பஹ்ரு பகுதியில் வசித்து வருகிறார்.

இவருடைய 3 மாதக் குழந்தைகளை கவனித்துக் கொள்ள சிங்கப்பூரில் வசிக்கும் தாயை வரவழைத்துள்ளார். இந்நிலையில் கொரனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்நிலையில் சிங்கப்பூரில் வசிக்கும் ஹெர்மனின் தந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரை கவனிக்க தன்னுடைய தயாரை அனுப்பியாக வேண்டும். ஆனால் ஊரடங்கு காரணமாக வாகனங்கள் செல்லவில்லை. தனக்கு முட்டிவலி பிரச்சனை இருந்தும் மருமகள் உதவியுடன் நடந்தே மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

அவ்வப்போது அவருக்கு போன் செய்து விசாரித்துக் கொண்டார் அவரது மருமகள். மலேசியாவில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்ட அந்த பெண்மணி இரவு 9.30 மணியளவில் நடந்தே சிங்கப்பூர் சென்றடைந்தார். இரண்டு நாட்டு எல்லையில் இருந்த குடிவரவு மற்றும் சோதனை சாவடி ஊழியர்கள் அவருக்கு உதவி உள்ளனர். மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் என்றால் 500 கிலோ மீட்டராவது நடந்து சென்றிருக்கலாம் என ஆச்சரியப்படாதீர்கள். அவர் நடந்து சென்றது 20 கிலோ மீட்டர் தூரம்தான். எனினும் வயோதிகப் பெண்மணி 20 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணிநேரம் நடந்து சென்றது நமக்கும் வருத்தம்தான்.