மாமியாரிடம் அத்துமீறிய மருமகன்! அதிர்ச்சியில் மனைவி எடுத்த விபரீத முடிவு! அதிர வைக்கும் சம்பவம்!

தர்மபுரி மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரி மாவட்டம் கதிர்நாய்க்கனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகள் மணிமொழி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான செங்கவி என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இந்நிலையில் பெண் வீட்டார் போதிய அளவு வரதட்சணை கொடுத்து பெண்ணை மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அது போதாதென்று திருமணமான இரண்டு நாட்களிலேயே மணமகன் குடும்பத்தார் பெண்ணிடம் 50 சவரன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கேட்டு கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில் மாமியார் வீட்டில் கொடுமை தாங்காமல் மணிமொழி தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று 5 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பெற்று வந்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்கள் செல்லவே திரும்பவும் வரதட்சணை கொடுமை செய்ய ஆரம்பித்துள்ளனர்.இதனால் மணிமொழிக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த மணிமொழி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

தன் பெற்றோர் வீட்டிற்கு சென்ற மணிமொழி அங்கிருந்து தனது கல்லூரிப் படிப்பை தொடர்ந்து மேலும் மேற்படிப்பிற்காக கோவையில் எம்எஸ்சி படிக்க விண்ணப்பித்ததாக தெரிகிறது இந்த தகவலை அறிந்த  செங்கவியின் வீட்டார் வரதட்சணை கேட்டால் கொடுக்க பணம் இல்லை ஆனால் மேற்படிப்புக்கு மட்டும் எப்படி பணம் இருக்கிறது எனக் கேட்டு மணிமொழியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளா. ர்அவரது கணவர் செங்கவி. இந்நிலையில் ஆத்திரம் அடைந்த அவரது கணவர் மாமியார் என்றும் பாருமல் மணிமொழியின் தாயாரை பலமாக தாக்கி அத்துமீறியுள்ளார்.

இதனால் பலத்த காயம் அடைந்த அவரது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மணிமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத நிலையில் மனமுடைந்த அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் இதனை அறிந்த பக்கத்து வீட்டார் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக தர்மபுரி மாவட்ட அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது மணிமொழி பலமுறை வரதட்சணை கொடுமை குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் அந்த புகாரின் பேரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தான் இவ்வாறு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் மனு அளித்து அதன் பேரில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மனமுடைந்து தெரிவித்துள்ளார். பின்னர் காவல் துறையினரிடம் மணிமொழியின் தந்தை பேசியதாவது செங்கவியின் குடும்பத்தினரால் எங்களது குடும்பத்திற்கு ஆபத்து உள்ளது எனவும் அவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றும் படியும் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் செங்கவியின் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை எச்சரித்து உள்ளனர்.