டாக்சி பயணத்தில் டிரைவரின் அசிங்க அத்துமீறல்! சகிக்க முடியாமல் இறங்கி ஓடிய பெண்கள்!

மும்பையில் டாக்சி பயணத்தின் போது தங்கள் முன்னிலையில் சுய பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக பெண் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


மும்பை தாதருக்கு தனது  தாய் மற்றும் சகோதரியுடன் வந்த அந்தப் பெண், தாதரில் இருந்து நாரிமன் பாய்ண்ட்டுக்கு ஒரு டாக்சியை பிடித்தார். தாயையும் சகோதரியையும் பின் சீட்டில் அமர்த்திவிட்டு டிரைவருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்த போது அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை ஓட்டுநர் தரக்குறைவாக நடந்துகொள்வான் என்று.

டாக்சி புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது கீழாடையை விலக்கிய ஓட்டுநர் சுய பாலியல் அத்துமீறலில் ஈடுபடத் தொடங்கியதைக் கண்டு அந்தப் பெண் அதிர்ந்தார். அதன் பிறகு ஒவ்வொரு சிக்னலில் டாக்சி நின்ற போதும் ஓட்டுநரின் செயல்பாடு அந்தப்பெண்ணுக்கு சங்கடத்தை அளித்தது.

ஓட்டுநரின் செயல்பாட்டை அவன் அறியாமல் செல்ஃபோனில் பதிவு செய்த அந்தப் பெண்  பாதி வழியிலேயெ குடும்பத்தினருடன் டாக்சியை விட்டு இறங்கியதோடு அது  குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

ஆனால் தற்போதுவரை அந்த நபரை போலீசார் கைது செய்யவில்லை என டிவிட்டரில் பதிவிட்டுள்ள அந்தப்பெண் தான் எடுத்த  வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.