போதையில் நட்சத்திர ஓட்டலில் உற்சாக நடனம்! பின்னர் தகராறு! விதவைப் பெண்ணின் அட்ராசிட்டி!

சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தன்னை உள்ளே விட மறுக்கப்பட்டதால் பெண் அழகுக் கலை நிபுணர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து அந்த இடமே பரபரப்பாக மாறியது.


அந்தப் பெண் தகராறு செய்யும் தகவலை அறிந்து வந்த போலீசார் சமாதானப் படுத்த முயன்றனர். ஆனால் அந்தப் பெண் தன்னை ஹோட்டலுக்குள் அனுமதிக்கச் சொல்லுமாறு மீண்டும் மீண்டும் காவல்துறையினரை வற்புறுத்திக் கொண்டிருந்த நிலையில் போலீசார் வேறு வழியின்றி அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது

சென்னை தண்டையார்பேட்டையில் பியூட்டி பார்லர் நடத்திவரும் அந்தப் பெண் அந்த நட்சத்திர ஓட்டலுக்கு அடிக்கடி வருவதும், பார்ட்டிகளில் கலந்துகொள்வதும் வழக்கம் என்று  போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி நடந்த ஒரு பார்ட்டியில் தன்னை ஒருவர் நடனமாட அழைத்ததாகவும் தான் மறுத்ததால் அவர் தன்னை தாக்கியதாகவும் அந்த பெண் புகார் அளித்ததாக போலீசார் கூறினார்.

சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் அவர் உதவி இயக்குநர் என தெரிய வந்ததாகவும் கூறிய போலீசார் எனினும் உதவி இயக்குநர் முன் ஜாமீன் பெற்று விட்டதால் தங்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்தனர். இந்நிலையில் அந்தப் பெண்ணால் விடுதியில் அடிக்கடி தகராறு ஏற்படுவதால் விடுதியில் அனுமதிப்பதில்லை என விடுதி நிர்வாகம் முடிவெடுத்து செயல்படுத்திய நிலையில் அந்தப் பெண் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

எனினும் அந்தப் பெண் மீது ஓட்டல் நிர்வாகம் புகார் அளிக்காததால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணின் கணவர், இறந்து சில மாதங்களாவதாகவும்,  இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவித்த போலீசார், இந்நிலையில் மது அருந்தும் பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அந்தப் பெண் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.