ஓயாமல் உல்லாசத்துக்கு அழைத்த மாமனார்! மருமகள் எடுத்த விபரீத முடிவு!

திருத்தணியில் மாமனார் கொடுத்த செக்ஸ் டார்ச்சரால் மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருத்தணி திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள வெங்கடாபுரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் முனிகிருஷ்ணன். இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். பள்ளிப்பட்டு அருகே உள்ள கரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் யுவராணி. இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

லாரி ஓட்டுநரான இவர் இரவு நேரங்களில் வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் முனிகிருஷ்ணனின் தந்தையான டில்லி பாபு தன் பாலியல் லீலைகளை மருமகளிடம் அரங்கேற்றி வந்தார். மாமானாரை மருமகள் கண்டித்து பார்த்துள்ளார் கேட்கவில்லை.

இதனால் தனது கணவரிடமும் மாமானார் எல்லை மீறுவது குறித்து பலமுறை யுவராணி தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. தன் தந்தை மீது வீண்பழி சுமத்துவதாக மனைவியையே சாடியுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மாமானார் மருமகளை உரிமையுடன் அணுக ஆரம்பித்துள்ளார்.

நிலைமை மோசமாக தொடங்கியது. மனம் உடைந்த யுவராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முனிகிருஷ்ணன் மற்றும் டில்லி பாபு இருவரையும் விசாரித்ததில் இந்த செய்தி வெளிவந்தது. உடனே டில்லிபாபுவை கைது செய்துள்ளனர்.

மேலும் தான் எவ்வளவோ கூறியும் எனது கணவர் நம்பவில்லை. இப்போவாது அவரது தந்தை குறித்து எனது கணவர் தெரிந்து கொள்ளட்டும் என்று உருக்கத்துடன் யுவராணி கடிதம் எழுதியுள்ளார்.