செக்ஸ் புகார் கூறி தற்கொலை முயற்சி! பிறகு அம்பலமான உண்மை! போலீசை அதிர வைத்த கார்த்திகாவின் டிக்டாக் வீடியோ!

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காரைக்குடி சேர்ந்த கார்த்திகா என்ற இளம் பெண் குடும்ப சூழல் காரணமாக தான் ஒரு ஷோரூமில் வேலைப்பார்த்து வருவதாகவும், அங்கு சிலர் தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாகவும், இதனால் கணவருடனும் மனஸ்தாபம் ஏற்பட்டு,


மன உளைச்சலில் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தற்கொலைக்கு காரணமானவர்கள் பெயரையும் பட்டியல் போடு வாட்சப்பில் வீடியோ பதிவு செய்து பதிவேற்றிய பெண், விஷம் அருந்துவது போன்ற காட்சிகள் உள்ளன. ஆனால் கார்த்திகா விஷம் என ஏமாற்றி சோப் ஆயிலை குடித்ததும், பொய்யான வீடியோவை பரப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்துவிசாரணை மேற்க்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகாவை நீதிபதி முன்னர் ஆஜர் படுத்த,வழக்கை விசாரித்த நீதிபதி, பிரச்சனை எல்லாருக்கும் தான் இருக்கு, இதுக்கு தற்கொலை முடிவா என கேள்வி எழுப்பினார்.

அடுத்த10 நாட்களுக்கு அரசு மருத்துவ மனைக்கு தற்கொலை முயற்சியில் அனுமதிக்கபட்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க சொல்லி நூதனமான தண்டனை விதித்து தரமான சம்பவம் செய்தார்.இந்த நூதன தண்டனை பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.