என்னை அனுபவித்துவிட்டு ஏமாற்றிவிட்டார்! திமுக நிர்வாகி மீது இளம் பெண் பகீர் புகார்! வைரலாகும் வீடியோ!

வாணியம்பாடி: ''என் சாவுக்கு திமுக முன்னாள் சேர்மன் ஏ.செல்வராஜ்தான் காரணம்,'' என்று, பெண் ஒருவர் பகீர் புகார் தெரிவித்துள்ளார்.


 இதுதொடர்பாக, வாட்ஸ்ஆப்பில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் பேசும் பெண் ஒருவர், ''என் பெயர் பூமா. நான் வாணியம்பாடி பகுதியில் வசிக்கிறேன். என்னுடைய சாவுக்கு, காரணம் திமுக முன்னாள் சேர்மன் ஏ.செல்வராஜ்தான். என்னை கல்யாணம் செய்துகொள்வதாகக் கூறிவிட்டு, என் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டார். என்னை விட்டுவிட்டு, தற்போது வேறு ஒரு பெண்கூட உல்லாசம் அனுபவித்து வருகிறார்.

முனிசிபாலிட்டி பணத்தை எல்லாம் கொள்ளையடிச்சி, அந்த லேடிக்கு, வீடு கட்டி கொடுத்துள்ளார். கார் வாங்கி தந்துள்ளார். அப்படிப்பட்ட மோசடி பேர்வழிதான், திரும்பவும் முனிசிபாலிட்டி தேர்தலில் போட்டியிடப் போகிறார். அவருக்கு ஓட்டுப் போட்டு ஏமாந்துவிடாதீர்கள். எனக்கு வாழவே பிடிக்கவில்லை. அவர் வீட்டுக்குப் பின்னாடிதான் என் வீடு உள்ளது. அவருடன் எடுத்த புகைப்படங்களை நான் வெளியிட்டுள்ளேன்.

என் சாவுக்கு, அவர்தான் காரணம். அவரை சும்மா விடாதீங்க ,'' என அந்த பெண், கதறியழுதபடி, புகார் கூறுகிறார். இது உண்மையா அல்லது ஏதேனும் தேர்தல் நேரத்து பரபரப்பா என தெரியவில்லை. இதுபற்றி போலீசார்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.