பெண்ணின் வயிற்றில் காட்டன் பஞ்சை வைத்து தைத்த பெண் டாக்டர்! பிறகு நேர்ந்த விபரீதம்!

கோவை மாவட்டத்தில் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு வயிற்றில் காட்டன் துணியை வைத்து தைத்து விட்டதாக கூறி மருத்துவமனை மீது கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.


கடந்த திங்கட்கிழமை அன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது இந்நிலையில் புவனேஸ்வரி என்ற பெண் தனது வயிற்றில் காட்டன் துணியை வைத்து வைத்துவிட்டதாக மருத்துவமனை மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கர்ப்பப்பை நீக்கம் மற்றும் குடலிறக்க அறுவைச் சிகிச்சைக்காக கோவை மாவட்டத்திலுள்ள ஜெனிசிஸ் ராயல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

சிகிச்சை முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி சரியாக ஆகாத நிலையில் கடந்த மார்ச் 2019 ல் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில்  காட்டன் துணி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்த செய்தியைக் கேட்ட புவனேஸ்வரி அதிர்ந்தார்.

பின்னர் அவரது கணவர் மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் தன் வயிற்றில் துணியை வைத்து தைத்த மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.